இந்திய ரயில்வே துறையில் வேலை வாய்ப்பு

ரைட்ஸ் (RITES) எனப்படும் ரயில் இந்தியா தொழில்நுட்ப மற்றும் பொருளாதார சேவை நிறுவனத்தில் உதவி மேலாளர் பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மொத்தம் 5 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இந்தப் பணியிடங்கள் நேரடி நியமனம் அடிப்படையில் நிரப்பப்பட உள்ளன. தகுதியுள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

Assistant Manager (IT/ Network & security)

மொத்த காலியிடங்களின் எண்ணிக்கை: 2

கல்வித் தகுதி:

Bachelor’s Degree in Computer Engineering/ Technology/ Computer Science/ Degree in Engineering in Computer Applications/ Information Technology/ Electronics/ Electronics & Telecommunications/ Electronics & Communication/ Electronics & Instrumentation படித்திருக்க வேண்டும். மேலும் 2 ஆண்டுகள் பணி அனுபவம் அவசியம்.

Assistant Manager (IT/ Programming)

Assistant Manager (IT/ Data Centre) 

மொத்த காலியிடங்களின் எண்ணிக்கை: 1

கல்வித் தகுதி:

Bachelor’s Degree in Computer Engineering/ Technology/ Computer Science/ Degree in Engineering in Computer Applications/ Information Technology/ Electronics/ Electronics & Telecommunications/ Electronics & Communication/ Electronics & Instrumentation படித்திருக்க வேண்டும். மேலும் 2 ஆண்டுகள் பணி அனுபவம் அவசியம்.

வயதுத் தகுதி: 

27.04.2026 அன்று 32 வயதிற்கு உட்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம். மத்திய அரசு விதிகளின்படி ஓ.பி.சி பிரிவினருக்கு 3 ஆண்டுகளும், எஸ்.சி, எஸ்.டி பிரிவினருக்கு 5 ஆண்டுகளும் வயது வரம்பில் தளர்வு உண்டு.

சம்பளம்: 

ஆண்டுக்கு ரூ. 16.01 லட்சம்

தேர்வு செய்யப்படும் முறை:

 இந்தப் பணியிடங்களுக்கு எழுத்துத் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். 

விண்ணப்பிக்கும் முறை: 

இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் http://www.rites.com என்ற இணையதளப் பக்கம் மூலமாக ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பிக்க கடைசி தேதி : 27.04.2026

விண்ணப்பக் கட்டணம்: பொது மற்றும் ஓ.பி.சி பிரிவுகளுக்கு ரூ. 600 மற்றும் இ.டபுள்யூ.எஸ், எஸ்.சி, எஸ்.டி மற்றும் மாற்றுத் திறனாளிகள் பிரிவுகளுக்கு ரூ. 300