RITES Recruitment 2026: ரயில்வே துறையில் வேலை வாய்ப்பு
ரைட்ஸ் (RITES) எனப்படும் ரயில் இந்தியா தொழில்நுட்ப மற்றும் பொருளாதார சேவை நிறுவனத்தில் உதவி மேலாளர் பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மொத்தம் 11 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இந்தப் பணியிடங்கள் நேரடி நியமனம் அடிப்படையில் நிரப்பப்பட உள்ளன. தகுதியுள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.
உதவி மேலாளர் (Assistant Manager (Finance))
மொத்த காலியிடங்களின் எண்ணிக்கை : 11
கல்வித் தகுதி :
விண்ணப்பதாரர்கள் Chartered Accountant / Cost Accountant படித்திருக்க வேண்டும். மேலும் 2 ஆண்டுகள் பணி அனுபவம் அவசியம்.
வயதுத் தகுதி :
32 வயதிற்கு உட்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம். மத்திய அரசு விதிகளின்படி வயது வரம்பில் தளர்வு உண்டு.
தேர்வு செய்யப்படும் முறை :
இந்தப் பணியிடங்களுக்கு எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பிக்கும் முறை :
இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் http://www.rites.com என்ற இணையதளத்தின் மூலமாக ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பிக்க கடைசி தேதி : 27.04.2026
விண்ணப்பக் கட்டணம்:
பொது மற்றும் ஓ.பி.சி பிரிவுகளுக்கு ரூ. 600 மற்றும் இ.டபுள்யூ.எஸ், எஸ்.சி, எஸ்.டி மற்றும் மாற்றுத் திறனாளிகள் பிரிவுகளுக்கு ரூ. 300