வேலூர் மத்திய கூட்டுறவு நிறுவனத்தில் வேலை வாய்ப்பு அறிவிப்பு

வேலூர் மாவட்டத்தை தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டு வரும் மத்திய அரசு நிறுவனமான தென்னிந்திய பன்மாநில வேளாண்மை கூட்டுறவு சங்க நிறுவனத்தில் மருத்துவர் பணியிடங்களில் உள்ள காலியிடங்களை நிரப்ப வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மொத்தம் 48 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. 

சித்த மருத்துவர்

காலியிடங்களின் எண்ணிக்கை : 12

கல்வித் தகுதி :

விண்ணப்பதாரர்கள் BSMS படித்திருக்க வேண்டும். 

சம்பளம் : ரூ. 15,800 – 34,000

ஆயுர்வேதிக் மருத்துவர்

காலியிடங்களின் எண்ணிக்கை : 12

கல்வித் தகுதி :

விண்ணப்பதாரர்கள் BAMS படித்திருக்க வேண்டும். 

சம்பளம் : ரூ. 15,800 – 34,000

ஹோமியோபதி மருத்துவர்

காலியிடங்களின் எண்ணிக்கை : 12

கல்வித் தகுதி:

விண்ணப்பதாரர்கள் BHMS படித்திருக்க வேண்டும். 

சம்பளம் : ரூ. 15,800 – 34,000

யோகா மற்றும் நேச்சுரோபதி மருத்துவர்

காலியிடங்களின் எண்ணிக்கை: 12

கல்வித் தகுதி :

விண்ணப்பதாரர்கள் BNYS படித்திருக்க வேண்டும். 

சம்பளம் : ரூ. 15,800 – 34,000

வயதுத் தகுதி : 

இந்தப் பணியிடங்களுக்கு 22 வயது முதல் 40 வயதிற்கு உட்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம். இருப்பினும் எஸ்.சி, எஸ்.சி.ஏ, எஸ்.டி (SC/SCA/ST) பிரிவுகளுக்கு 5 ஆண்டுகளும், ஓ.பி.சி (OBC) பிரிவுக்கு 3 ஆண்டுகளும் வயது வரம்பு தளர்வு உண்டு.

தேர்வு செய்யப்படும் முறை : 

இந்தப் பணியிடங்களுக்கு நேர்முகத் தேர்வின் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை : 

இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்புகிறவர்கள் https://simcoagri.com/image/main-slider/home-1/simco-application-2026.pdf என்ற இணையதளப் பக்கத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தினை பதிவிறக்கம் செய்து பிரிண்ட் எடுத்துக் கொள்ள வேண்டும். பின்னர் விண்ணப்பத்தினை பூர்த்தி செய்து தேவையான ஆவணங்களை இணைத்து கீழ்கண்ட முகவரிக்கு நேரிலோ அல்லது தபால் மூலமாகவோ கிடைக்கச் செய்ய வேண்டும். 

முகவரி :

MANAGING DIRECTOR SOUTH INDIA MULTI - STATE AGRICULTURE CO-OPERATIVE SOCIETY LTD., NO.35, 1ST WEST CROSS ROAD, NEAR GOVT. LAW COLLAGE, GANDHI NAGAR, SILK MILL, VELLORE – 632 006.

விண்ணப்பிக்க கடைசி தேதி : 31.03.2026