தமிழக அரசின் தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் துறையில் வேலை வாய்ப்பு அறிவிப்பு

தமிழ்நாடு அரசின் தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் துறையின் கீழ் தமிழ்நாடு திரைப்படப் பிரிவில் திறன்மிகு உதவியாளர் பணியிடங்களை நிரப்புவதற்கான வேலை வாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மொத்தம் 2 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இந்த பணியிடங்கள் நேரடி நியமனம் அடிப்படையில் நிரப்பப்பட உள்ளன.

திறன்மிகு உதவியாளர்

காலியிடங்களின் எண்ணிக்கை : 2

கல்வித் தகுதி :

விண்ணப்பிக்க விரும்புகிறவர்கள் 10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும் 3 வருட பணி அனுபவம் உடையவராக இருக்க வேண்டும்.

சம்பளம் : ரூ. 19,500 – 71,900

தேர்வு செய்யப்படும் முறை : 

இந்தப் பணியிடங்களுக்கு நேர்முகத் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை : 

இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்புகிறவர்கள்  தங்கள் சுயவிவரக் குறிப்பு அடங்கிய விண்ணப்பத்தினை தேவையான ஆவணங்களுடன் கீழ்கண்ட முகவரிக்கு அனுப்ப வேண்டும். 

முகவரி :

தலைமை பொறியாளர் (மு.கூ.பொ), தமிழ்நாடு திரைப்படப் பிரிவு, கலைவாணர் அரங்க வளாகம், வாலாஜா சாலை, சென்னை - 02

விண்ணப்பிக்க கடைசி தேதி : 20.03.2026