தகுதி வாய்ந்த டிகிரி, இன்ஜினியரிங் படித்தவர்களுக்கு தமிழ்நாடு அரசில் வேலை வாய்ப்பு
தமிழ்நாடு அரசின் உள்கட்டமைப்பு மேம்பாட்டு வாரியத்தில் பகுப்பாய்வாளர் பணியிடத்தை நிரப்புவதற்கான வேலை வாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்த பணியிடம் தற்காலிக நியமனம் அடிப்படையில் நிரப்பப்பட உள்ளன.
பகுப்பாய்வாளர் (Analyst)
காலியிடங்களின் எண்ணிக்கை : 1
கல்வித் தகுதி :
விண்ணப்பதாரர்கள் Bachelor’s/ Master’s degree in Economics, Statistics, Public Policy, Development Studies, Social Sciences, Engineering படித்திருக்க வேண்டும். மேலும் 3 – 5 வருட பணி அனுபவம் உடையவராக இருக்க வேண்டும்.
சம்பளம் :
இந்த பதவிக்குரிய தகுதிக்கு ஏற்ப சம்பளம் வழங்கப்படும்.
தேர்வு செய்யப்படும் முறை :
இந்தப் பணியிடங்களுக்கு நேர்முகத் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பிக்கும் முறை :
இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்புகிறவர்கள் தங்கள் சுயவிவரக் குறிப்பு அடங்கிய விண்ணப்பத்தினை தேவையான ஆவணங்களுடன் கீழ்கண்ட முகவரி மற்றும் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்ப வேண்டும்.
முகவரி :
The Chief Executive Officer, Tamil Nadu Infrastructure Development Board, 3 rd Floor, Tower-II CMDA Building, Egmore, Chennai-8
மின்னஞ்சல் முகவரி : soinfra.findpt@tn.gov.in
விண்ணப்பிக்க கடைசி தேதி : 13.04.2026