திருச்சி மாவட்ட ஆவின் நிறுவனத்தில் வேலை வாய்ப்பு அறிவிப்பு
திருச்சி மாவட்ட ஆவின் நிறுவனத்தில் காலியாக உள்ள கால்நடை மருத்துவ ஆலோசகர் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மொத்தம் 7 பணியிடங்கள் நிரப்பட உள்ளன. இந்தப் பணியிடங்கள் தற்காலிக அடிப்படையில் நிரப்பப்பட உள்ளது.
Veterinary Consultant
காலியிடங்களின் எண்ணிக்கை : 4
கல்வித் தகுதி :
இந்தப் பணியிடங்களுக்கு B.V.Sc & A.H படித்திருக்க வேண்டும். கணினி பயன்பாடு தெரிந்திருக்க வேண்டும். மேலும் இரு சக்கர அல்லது நான்கு சக்கர வாகன ஓட்டுநர் உரிமம் வைத்திருக்க வேண்டும்.
வயதுத் தகுதி :
50 வயதிற்கு உட்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம்.
தேர்வு முறை :
இந்த பணியிடங்களுக்கு நேர்முகத் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவர்.
நேர்முகத் தேர்வு நடைபெறும் நாள் : 13.02.2026
நேர்முகத் தேர்வு நடைபெறும் இடம் :
திருச்சிராப்பள்ளி மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் ஒன்றிய வளாகம், திருச்சி