கோவை மாவட்ட ஊரக வளர்ச்சித் துறையில் சூப்பர் வேலை வாய்ப்பு அறிவிப்பு

தமிழக அரசின் தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கத்தில் (TNSRLM) கோயம்புத்தூர் மாவட்டத்தில் வட்டார ஒருங்கிணைப்பாளர் (Block Coordinator) பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மொத்தம் 28 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இந்தப் பணியிடங்கள் தற்காலிக அடிப்படையில் நிரப்பப்பட உள்ளன. 

வட்டார ஒருங்கிணைப்பாளர்

காலியிடங்களின் எண்ணிக்கை : 28

கல்வித் தகுதி :

இளநிலை பட்டப்படிப்பு படித்திருக்க வேண்டும். கணினி இயக்க தெரிந்திருக்க வேண்டும். இரு சக்கர வாகன ஓட்டுநர் உரிமம் பெற்றிருக்க வேண்டும். மேலும் 5 ஆண்டுகள் பணி அனுபவம் அவசியம்.

வயதுத் தகுதி :

இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க 16.02.2026 அன்று 18 வயது முதல் 30 வயதிற்குள் இருக்க வேண்டும். 

தேர்வு செய்யப்படும் முறை : 

இந்த பணியிடங்களுக்கு எழுத்துத் தேர்வு நேர்முகத் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள். 

விண்ணப்பிக்கும் முறை : 

இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்புகிறவர்கள்  https://cdn.s3waas.gov.in/s3019d385eb67632a7e958e23f24bd07d7/uploads/2026/02/17703783894100.pdf என்ற இணையதளப் பக்கத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தினை பதிவிறக்கம் செய்து பிரிண்ட் எடுத்துக் கொள்ள வேண்டும். பின்னர் விண்ணப்பத்தினை பூர்த்தி செய்து தேவையான ஆவணங்களுடன் கீழ்கண்ட முகவரியில் சமர்பிக்க வேண்டும்.

முகவரி :

இணை இயக்குநர்/ திட்ட இயக்குநர், தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம், 2வது தளம், பழைய கட்டிடம், மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலக வளாகம், கோயம்புத்தூர் - 641018

விண்ணப்பிக்க கடைசி தேதி : 16.02.2026