காஞ்சிபுரம் மாவட்ட சுகாதாரத் துறையில் வேலை வாய்ப்பு அறிவிப்பு

காஞ்சிபுரம் மாவட்ட சுகாதாரத் துறையின் கீழ் மாவட்ட நலவாழ்வுச் சங்கத்தில் மூலம் பல்வேறு பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. மொத்தம் 10 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இந்த பணியிடங்கள் தற்காலிக நியமனம் அடிப்படையில் நிரப்பப்பட உள்ளன. 

Lab Technician

காலியிடங்களின் எண்ணிக்கை: 1

கல்வித் தகுதி :

Diploma Medical Laboratory Technology படித்திருக்க வேண்டும். 

சம்பளம் : ரூ. 13,000

Lab Technician

காலியிடங்களின் எண்ணிக்கை: 4

கல்வித் தகுதி :

Diploma or certified Medical Laboratory Technology Course படித்திருக்க வேண்டும். 

சம்பளம் : ரூ. 13,000

TB Health Visitor

காலியிடங்களின் எண்ணிக்கை: 5

கல்வித் தகுதி :

12 ஆம் வகுப்பில் உயிரியல் படித்து தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும் Health Worker பணி அனுபவம் வேண்டும். 

சம்பளம் : ரூ. 13,300

தேர்வு செய்யப்படும் முறை :

 இந்தப் பணியிடங்களுக்கு நேர்முகத் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். 

விண்ணப்பிக்கும் முறை : 

இந்தப் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்புவோர்  https://cdn.s3waas.gov.in/s31543843a4723ed2ab08e18053ae6dc5b/uploads/2026/01/17678656426479.pdf என்ற இணையதளப் பக்கத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தினை பதிவிறக்கம் செய்து பிரிண்ட் எடுத்துக் கொள்ள வேண்டும். பின்னர் விண்ணப்பத்தினை பூர்த்தி செய்து தேவையான ஆவணங்களுடன் கீழ்கண்ட முகவரிக்கு அனுப்ப வேண்டும்.

முகவரி :

நிர்வாகச் செயலாளர், மாவட்ட நலவாழ்வுச் சங்கம்/ மாவட்ட சுகாதார அலுவலர் அலுவலகம், 42ஏ ரயில்வே ரோடு, அறிஞர் அண்ணா நினைவு புற்றுநோய் வளாகம், காஞ்சிபுரம் - 631501

விண்ணப்பிக்க கடைசி தேதி : 23.01.2026