திருவாரூர் மாவட்ட மத்திய பல்கலைகழகத்தில் வேலை வாய்ப்பு அறிவிப்பு
திருவாரூர் மாவட்டத்தில் இயங்கி வரும் தமிழ்நாடு மத்திய பல்கலைக்கழகத்தில் கிளர்க், உதவியாளர் உள்ளிட்ட பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. மொத்தம் 13 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இந்த பணியிடங்கள் நேரடி பணி நியமனம் அடிப்படையில் நிரப்பப்பட உள்ளன.
Personal Assistant
காலியிடங்களின் எண்ணிக்கை : 1
கல்வித் தகுதி :
இளநிலை பட்டப்படிப்பு படித்திருக்க வேண்டும். சுருக்கெழுத்து தட்டச்சு தெரிந்திருக்க வேண்டும்.
வயதுத் தகுதி :
25 வயதிற்கு உட்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம்.
சம்பளம் : நிலை 6
Senior Technical Assistant (Computer)
காலியிடங்களின் எண்ணிக்கை: 1
கல்வித் தகுதி :
B.E./ B.Tech in Computer Science & Engineering/ Electronics Engineering OR M.C.A/ M.Sc in Computer Science படித்திருக்க வேண்டும்.
வயதுத் தகுதி :
35 வயதிற்கு உட்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம்.
சம்பளம்:
நிலை 6
Semi Professional Assistant
காலியிடங்களின் எண்ணிக்கை : 1
கல்வித் தகுதி :
Master’s degree in Library Science, Information Science படித்திருக்க வேண்டும்.
வயதுத் தகுதி :
32 வயதிற்கு உட்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம்.
சம்பளம் :
நிலை 5
Upper Division Clerk
காலியிடங்களின் எண்ணிக்கை : 2
கல்வித் தகுதி :
இளநிலை பட்டப்படிப்பு படித்திருக்க வேண்டும். தட்டச்சு தெரிந்திருக்க வேண்டும்.
வயதுத் தகுதி : 32 வயதிற்கு உட்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம்.
சம்பளம் : நிலை 4
Laboratory Assistant
காலியிடங்களின் எண்ணிக்கை : 1
கல்வித் தகுதி :
Bachelor’s Degree in Physics or Chemistry or Microbiology படித்திருக்க வேண்டும்.
வயதுத் தகுதி :
32 வயதிற்கு உட்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம்.
சம்பளம் : நிலை 4
Lower Division Clerk
காலியிடங்களின் எண்ணிக்கை : 5
கல்வித் தகுதி :
இளநிலை பட்டப்படிப்பு படித்திருக்க வேண்டும். தட்டச்சு மற்றும் கணினி இயக்க தெரிந்திருக்க வேண்டும்.
வயதுத் தகுதி :
32 வயதிற்கு உட்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம்.
சம்பளம்: நிலை 2
Hindi Typist
காலியிடங்களின் எண்ணிக்கை: 1
கல்வித் தகுதி :
இளநிலை பட்டப்படிப்பு படித்திருக்க வேண்டும். ஹிந்தி தட்டச்சு தெரிந்திருக்க வேண்டும்.
வயதுத் தகுதி :
32 வயதிற்கு உட்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம்.
சம்பளம் : நிலை 2
Multi-Tasking Staff
காலியிடங்களின் எண்ணிக்கை : 1
கல்வித் தகுதி :
விண்ணப்பிக்க விரும்புகிறவர்கள் 10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
வயதுத் தகுதி :
32 வயதிற்கு உட்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம்.
சம்பளம் : நிலை 1
வயது வரம்பு தளர்வு :
மத்திய அரசு விதிகளின்படி ஓ.பி.சி பிரிவினருக்கு 3 ஆண்டுகளும், எஸ்.சி, எஸ்.டி பிரிவுகளுக்கு 5 ஆண்டுகளும் வயது வரம்பில் தளர்வு உண்டு.
தேர்வு செய்யப்படும் முறை :
இந்த பணியிடங்களுக்கு எழுத்துத் தேர்வு அல்லது நேர்முகத் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.
விண்ணப்பிக்கும் முறை :
இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்புகிறவர்கள் https://cutn.ac.in/ என்ற இணையதளப் பக்கம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பிக்க கடைசி நாள் : 21.06.2026