சென்னை தோல் ஆராய்ச்சி நிறுவனத்தில் வேலை வாய்ப்பு அறிவிப்பு
தேசிய தோல் ஆராய்ச்சி நிறுவனத்தில் இளநிலை நிர்வாக உதவியாளர் பணியிடங்களை நிரப்புவதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. விருப்பமுள்ளவர்கள் இந்த அருமையான வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ளுங்கள்.
மத்திய அரசு நிறுவனமான தேசிய தோல் ஆராய்ச்சி நிறுவனம் சென்னையில் செயல்பட்டு வருகிறது. இந்த நிறுவனத்தில் உதவியாளர் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இந்தப் பணியிடங்கள் நேரடி நியமனம் அடிப்படையில் நிரப்பப்பட உள்ளன.
Junior Stenographer
காலியிடங்களின் எண்ணிக்கை : 1
கல்வித் தகுதி :
12 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். சுருக்கெழுத்து தட்டச்சு தெரிந்திருக்க வேண்டும்.
வயதுத் தகுதி :
27 வயதிற்கு உட்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம்.
சம்பளம் : ரூ. 53,628
Junior Secretariat Assistant (Gen)
காலியிடங்களின் எண்ணிக்கை : 2
கல்வித் தகுதி :
12 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
வயதுத் தகுதி :
28 வயதிற்கு உட்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம்.
சம்பளம் : ரூ. 39,545
Junior Secretariat Assistant (S&P)
காலியிடங்களின் எண்ணிக்கை : 3
கல்வித் தகுதி :
12 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
வயதுத் தகுதி :
28 வயதிற்கு உட்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம்.
சம்பளம் : ரூ. 39,545
Junior Secretariat Assistant (F&A)
காலியிடங்களின் எண்ணிக்கை : 1
கல்வித் தகுதி :
12 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
வயதுத் தகுதி :
28 வயதிற்கு உட்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம்.
சம்பளம் : ரூ. 39,545
Multitasking Staff
காலியிடங்களின் எண்ணிக்கை : 6
கல்வித் தகுதி :
விண்ணப்பிதாரர்கள் 10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
வயதுத் தகுதி :
28 வயதிற்கு உட்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம்.
சம்பளம் : ரூ. 35,973
வயது வரம்பு தளர்வு :
மத்திய அரசு விதிகளின்படி, ஓ.பி.சி பிரிவினருக்கு 3 ஆண்டுகளும், எஸ்.சி, எஸ்.டி பிரிவினருக்கு 5 ஆண்டுகளும் வயது வரம்பில் தளர்வு உண்டு.
தேர்வு செய்யப்படும் முறை :
இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்புகிறவர்கள் எழுத்துத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் நிரப்பப்படுவார்கள்.
விண்ணப்பிக்கும் முறை :
இந்தப் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் https://jsa.clri.org/ என்ற இணையதளப் பக்கம் மூலமாக ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பிக்க கடைசி தேதி : 22.02.2026