கூட்டுறவு நிறுவனத்தில் வேலை வாய்ப்பு அறிவிப்பு

வேலூர் மாவட்டத்தை தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டு வரும் மத்திய அரசு நிறுவனமான தென்னிந்திய பன்மாநில வேளாண்மை கூட்டுறவு சங்க நிறுவனத்தில் அலுவலக உதவியாளர், மார்க்கெட்டிங் மேனேஜர் உள்ளிட்ட பணியிடங்களில் உள்ள காலியிடங்களை நிரப்ப வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மொத்தம் 52 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.

Social Marketing Manager

காலியிடங்களின் எண்ணிக்கை : 12

கல்வித் தகுதி :

இளநிலை பட்டப்படிப்பு படித்திருக்க வேண்டும். மேலும் 2 ஆண்டுகள் பணி அனுபவம் அவசியம்.

சம்பளம் : ரூ. 7,200 - 28,200

Credit Executive

காலியிடங்களின் எண்ணிக்கை : 20

கல்வித் தகுதி :

இளநிலை பட்டப்படிப்பு அல்லது டிப்ளமோ படிப்பு படித்திருக்க வேண்டும்.

சம்பளம் : ரூ. 6,200 - 26,200

Clerk

காலியிடங்களின் எண்ணிக்கை : 10

கல்வித் தகுதி :

12 ஆம் வகுப்பு தேர்ச்சி அல்லது டிப்ளமோ படிப்பு படித்திருக்க வேண்டும்.

சம்பளம் : ரூ. 5,200 - 20,200

Office Assistant

காலியிடங்களின் எண்ணிக்கை : 10

கல்வித் தகுதி :

10 ஆம் வகுப்பு தேர்ச்சி அல்லது ஐ.டி.ஐ படிப்பு படித்திருக்க வேண்டும்.

சம்பளம் : ரூ. 5,200 - 20,200

வயதுத் தகுதி : 

மேனேஜர் மற்றும் எக்ஸிக்யூடிவ் பணியிடங்களுக்கு 12.12.2025 அன்று 22 முதல் 36 வயதிற்குள் இருக்க வேண்டும். கிளர்க் மற்றும் அலுவலக உதவியாளர் பணியிடங்களுக்கு 21 முதல் 30 வயதிற்குள் இருக்க வேண்டும். இருப்பினும் எஸ்.சி, எஸ்.சி.ஏ, எஸ்.டி (SC/SCA/ST) பிரிவுகளுக்கு 5 ஆண்டுகளும், ஓ.பி.சி (OBC) பிரிவுக்கு 3 ஆண்டுகளும் வயது வரம்பு தளர்வு உண்டு.

தேர்வு செய்யப்படும் முறை : 

இந்தப் பணியிடங்களுக்கு எழுத்து தேர்வு, சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் நேர்முகத் தேர்வின் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை : 

இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்புகிறவர்கள்  https://simcoagri.com/image/main-slider/home-1/Simco-job-application-2025-2026.pdf என்ற இணையதளப் பக்கத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தினை பதிவிறக்கம் செய்து பிரிண்ட் எடுத்துக் கொள்ள வேண்டும். பின்னர் விண்ணப்பத்தினை பூர்த்தி செய்து தேவையான ஆவணங்களை இணைத்து கீழ்கண்ட முகவரிக்கு நேரிலோ அல்லது தபால் மூலமாகவோ கிடைக்கச் செய்ய வேண்டும். 

முகவரி :

SOUTH INDIA MULTI-STATE AGRICULTURE CO-OPERATIVE SOCIETY LTD., [SIMCO] NO.35, 1ST WEST CROSS ROAD, NEAR GOVT. LAW COLLEGE, GANDHI NAGAR, VELLORE-06.

விண்ணப்பக் கட்டணம் :

பொதுப் பிரிவு ரூ. 500, எஸ்.சி/ எஸ்.டி பிரிவினருக்கு ரூ. 250

விண்ணப்பிக்க கடைசி தேதி : 20.01.2026