தேனி மாவட்ட சுகாதாரத் துறையில் வேலை வாய்ப்பு அறிவிப்பு

தேனி மாவட்ட சுகாதாரத் துறையின் கீழ் மாவட்ட நலவாழ்வுச் சங்கத்தில் மூலம் அரசு மருத்துவமனைகள் மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்களில் பல்வேறு பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. மொத்தம் 9 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இந்த பணியிடங்கள் தற்காலிக நியமனம் அடிப்படையில் நிரப்பப்பட உள்ளன. 

RMNCH Counsellor

காலியிடங்களின் எண்ணிக்கை : 1

கல்வித் தகுதி :

Master/ Bachelor Degree Social Work / Public Administration / Psychology / Sociology / Home Science / Hospital & Health Management படித்திருக்க வேண்டும். 

சம்பளம் : ரூ. 18,000

Pharmacist 

காலியிடங்களின் எண்ணிக்கை : 1

கல்வித் தகுதி :

Diploma in Pharmacy or Bachelor of Pharmacy or Pharm.D படித்திருக்க வேண்டும். 

சம்பளம்: ரூ. 15,000

Health Inspector – Grade - II 

காலியிடங்களின் எண்ணிக்கை : 1

கல்வித் தகுதி :

12 ஆம் வகுப்பில் உயிரியல் படித்து தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும் Multi – Purpose Health Worker (Male) / Health Inspector / Sanitary Inspector Course training படித்திருக்க வேண்டும். 

சம்பளம் : ரூ. 14,000

Staff Nurse 

காலியிடங்களின் எண்ணிக்கை : 3

கல்வித் தகுதி :

விண்ணப்பதாரர்கள் Diploma in GNM/B.Sc., (Nursing) படித்திருக்க வேண்டும். 

சம்பளம் : ரூ. 18,000

MPHW

காலியிடங்களின் எண்ணிக்கை : 2

கல்வித் தகுதி :

8 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். 

சம்பளம் : ரூ. 8,500

Lab Technician

காலியிடங்களின் எண்ணிக்கை : 1

கல்வித் தகுதி :

விண்ணப்பிக்க விரும்புகிறவர்கள் Medical Laboratory Technology Course படித்திருக்க வேண்டும். 

சம்பளம் : ரூ. 13,000

தேர்வு செய்யப்படும் முறை :

இந்தப் பணியிடங்களுக்கு நேர்முகத் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். 

விண்ணப்பிக்கும் முறை : 

இந்தப் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்புகிறவர்கள்  https://cdn.s3waas.gov.in/s39a96876e2f8f3dc4f3cf45f02c61c0c1/uploads/2025/12/17669880519277.pdf என்ற இணையதளப் பக்கத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தினை பதிவிறக்கம் செய்து பிரிண்ட் எடுத்துக் கொள்ள வேண்டும். பின்னர் விண்ணப்பத்தினை பூர்த்தி செய்து தேவையான ஆவணங்களுடன் கீழ்கண்ட முகவரிக்கு அனுப்ப வேண்டும்.

முகவரி :

மாவட்ட சுகாதார அலுவலர், மாவட்ட சுகாதார அலுவலகம், பல்துறை அலுவலக வளாகம், பிளாக் எண்: 1, மாவட்ட ஆட்சியர் அலுவலகம் பின்புறம், தேனி - 625531

விண்ணப்பிக்க கடைசி தேதி : 09.01.2026