திருநெல்வேலி மாவட்ட சத்துணவு மையங்களில் வேலை வாய்ப்பு அறிவிப்பு

திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள பள்ளிகளில் செயல்படும் சத்துணவு மையங்களில் காலியாக உள்ள சமையல் உதவியாளர் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. மொத்தம் 15 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இந்தப் பணியிடங்கள் நேரடி நியமனம் அடிப்படையில் நிரப்பப்பட உள்ளன. 

சமையல் உதவியாளர்

காலியிடங்களின் எண்ணிக்கை : 15

கல்வித் தகுதி :

இந்தப் பணியிடங்களுக்கு 10 ஆம் வகுப்பு படித்திருக்க வேண்டும். தமிழில் எழுதப் படிக்கத் தெரிந்திருக்க வேண்டும்.

வயதுத் தகுதி :

பொது மற்றும் தாழ்த்தப்பட்டோர் 21 வயது முதல் 40 வயது வரை விண்ணப்பிக்கலாம். பழங்குடியினர் 18 வயது முதல் 40 வயது வரை விண்ணப்பிக்கலாம். விதவை மற்றும் கணவரால் கைவிடப்பட்டோர் 20 வயது முதல் 40 வயது வரை விண்ணப்பிக்கலாம்.

சம்பளம் :

தொகுப்பூதியம் ரூ. 3,000, ஓராண்டுக்குப் பின் ரூ. 3000 - 9000

தேர்வு செய்யப்படும் முறை :

 இந்தப் பணியிடங்களுக்கு நேர்முகத் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை : 

இந்தப் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்புகிறவர்கள்  https://cdn.s3waas.gov.in/s36a9aeddfc689c1d0e3b9ccc3ab651bc5/uploads/2025/12/17671570711358.pdf என்ற இணையதளப் பக்கத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தினை பதிவிறக்கம் செய்து பிரிண்ட் எடுத்துக் கொள்ள வேண்டும். பின்னர் விண்ணப்பத்தினை பூர்த்தி செய்து, தேவையான ஆவணங்களுடன் தொடர்புடைய ஊராட்சி ஒன்றிய அலுவலகம் அல்லது மாநகராட்சி, நகராட்சிகளுக்கு அனுப்ப வேண்டும்.

விண்ணப்பிக்க கடைசி தேதி : 14.01.2026