சென்னை உயர் நீதிமன்றத்தில் வேலை வாய்ப்பு அறிவிப்பு
சென்னை உயர் நீதிமன்றத்தில் சட்ட ஆராய்ச்சி உதவியாளர் பணியிடங்களை நிரப்புவதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. மொத்தம் 28 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இந்த பணியிடங்கள் தற்காலிக நியமனம் அடிப்படையில் நிரப்பப்பட உள்ளன.
Research Law Assistant
காலியிடங்களின் எண்ணிக்கை : 28
கல்வித் தகுதி :
விண்ணப்பதாரர்கள் இளநிலை சட்டப்படிப்பு படித்திருக்க வேண்டும். மேலும் பார் கவுன்சிலில் அங்கீகரிக்கப்பட்டு இருக்க வேண்டும்.
வயதுத் தகுதி :
இந்தப் பணியிடங்களுக்கு 30 வயதிற்கு உட்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம்.
சம்பளம் : ரூ. 50,000
தேர்வு செய்யப்படும் முறை :
இந்தப் பணியிடங்களுக்கு நேர்முகத் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பிக்கும் முறை :
இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்புகிறவர்கள் https://hcmadras.tn.gov.in/ என்ற இணையதளப் பக்கம் மூலமாக ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். பின்னர் விண்ணப்பத்தினை பதிவிறக்கம் செய்து தேவையான ஆவணங்களுடன் கீழ்கண்ட அஞ்சல் மற்றும் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்ப வேண்டும்.
முகவரி :
The Registrar General, High Court, Madras - 600104
மின்னஞ்சல் முகவரி :
mhclawclerkrec@gmail.com
விண்ணப்பிக்க கடைசி தேதி : 15.12.2025