அரியலூர் மாவட்ட ஊரக வளர்ச்சித்துறையில் வேலை வாய்ப்பு அறிவிப்பு
அரியலூர் மாவட்டம் த.பழூர் மற்றும் அரியலூர் ஊராட்சி ஓன்றியங்களில் காலியாக உள்ள ஓட்டுநர் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மொத்தம் 2 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இந்த பணியிடங்கள் நேரடி நியமனம் அடிப்படையில் நிரப்பப்பட உள்ளது.
ஈப்பு ஓட்டுநர்
காலியிடங்களின் எண்ணிக்கை : 2
- த.பழூர் – 1
- அரியலூர் – 1
கல்வித் தகுதி :
8 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மோட்டார் வாகனச் சட்டத்தின்படி தகுதியான அலுவலரால் வழங்கப்பட்ட செல்லத்தக்க ஓட்டுநர் உரிமம் வைத்திருக்க வேண்டும். மேலும் 5 ஆண்டுகளுக்கு குறையாமல் முன் அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
வயதுத் தகுதி :
இந்த பணியிடங்களுக்கு 01.07.2025 அன்று 18 வயது முதல் 42 வயது வரை உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.
சம்பளம் : ரூ.19,500 – 71,900
தேர்வு செய்யப்படும் முறை :
இந்தப் பணியிடங்களுக்கு நேர்முகத் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பிக்கும் முறை :
இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்புகிறவர்கள் https://ariyalur.nic.in/notice_category/recruitment/ என்ற இணையதளப் பக்கத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தினை பதிவிறக்கம் செய்து, பிரிண்ட் எடுத்து பூர்த்தி செய்துக் கொள்ள வேண்டும். பின்னர் விண்ணப்பத்தினை தேவையான ஆவணங்களுடன் சம்பந்தப்பட்ட ஊராட்சி ஒன்றியங்களின் முகவரிக்கு அனுப்ப வேண்டும்.
விண்ணப்பிக்க கட்டணம் :
ரூ. 50, சம்பந்தப்பட்ட ஊராட்சி ஒன்றியங்களின் பெயரில் வங்கி வரைவோலையாக விண்ணப்பத்துடன் அனுப்ப வேண்டும்.
விண்ணப்பிக்க கடைசி தேதி : 04.12.2025
இந்த வேலை வாய்ப்பு தொடர்பாக மேலும் விவரங்கள் அறிய https://ariyalur.nic.in/notice_category/recruitment/ என்ற இணையதளப் பக்கத்தில் கொடுக்கப்பட்டுள்ள அறிவிப்பினைப் பார்வையிடவும்.