ஈரோடு மாவட்ட சுகாதாரத் துறையில் வேலை வாய்ப்பு அறிவிப்பு

ஈரோடு மாவட்ட சுகாதாரத் துறையின் கீழ் மாவட்ட நலவாழ்வுச் சங்கத்தில் மூலம் அரசு மருத்துவமனைகள் மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்களில் பல்வேறு பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. மொத்தம் 20 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இந்த பணியிடங்கள் தற்காலிக நியமனம் அடிப்படையில் நிரப்பப்பட உள்ளன. 

Special Educator for Behavioural Therapy

காலியிடங்களின் எண்ணிக்கை : 1

கல்வித் தகுதி :

Diploma /Bachelors /Master's degree in Special Education (D.Ed / B.Ed/M.Ed) படித்திருக்க வேண்டும். 

சம்பளம்:  ரூ. 17,000

Audio Metric Assistant

காலியிடங்களின் எண்ணிக்கை : 1

கல்வித் தகுதி :

Diploma in Hearing Language and Speech (DHLS) படித்திருக்க வேண்டும். 

சம்பளம் : ரூ. 17,250

RMNCH Counsellor

காலியிடங்களின் எண்ணிக்கை : 1

கல்வித் தகுதி :

Masters / Bachelors Degree in Social Work / Public Administration / Psychology / Sociology / Home Science / Hospital & Health Management படித்திருக்க வேண்டும். 

சம்பளம் : ரூ. 18,000

Yoga and Naturopathy Doctor

காலியிடங்களின் எண்ணிக்கை : 1

கல்வித் தகுதி :

BNYS or MD (Y&N) படித்திருக்க வேண்டும். 

சம்பளம் : ரூ. 40,000

Ayurveda Doctor

காலியிடங்களின் எண்ணிக்கை : 1

கல்வித் தகுதி :

BAMS or MD (A) படித்திருக்க வேண்டும். 

சம்பளம் : ரூ. 40,000

Consultant (Yoga and Naturopathy)

காலியிடங்களின் எண்ணிக்கை : 3

கல்வித் தகுதி :

BNYS or MD (Y&N) படித்திருக்க வேண்டும். 

சம்பளம் : ரூ. 40,000

Attender (MPW) (Yoga and Naturopathy)

காலியிடங்களின் எண்ணிக்கை : 3

கல்வித் தகுதி :

8 ஆம் வகுப்பு தேர்ச்சி அல்லது தமிழில் எழுதப் படிக்கத் தெரிந்திருக்க வேண்டும்.

சம்பளம் : ரூ. 10,000

Siddha Doctor

காலியிடங்களின் எண்ணிக்கை : 1

கல்வித் தகுதி :

MD (Siddha) படித்திருக்க வேண்டும்.

சம்பளம் : ரூ. 60,000

Yoga Professional

காலியிடங்களின் எண்ணிக்கை : 1

கல்வித் தகுதி :

BNYS படித்திருக்க வேண்டும். 

சம்பளம் : ரூ. 28,000

Siddha – Pharmacist

காலியிடங்களின் எண்ணிக்கை : 1

கல்வித் தகுதி :

விண்ணப்பிக்க விரும்புகிறவர்கள் Diploma in integrate Pharmacist படித்திருக்க வேண்டும். 

சம்பளம் : ரூ. 20,000

Siddha - Therapeutic Assistant (Female & Male) 

காலியிடங்களின் எண்ணிக்கை : 4

கல்வித் தகுதி :

விண்ணப்பதாரர்கள் Diploma Nursing Therapy படித்திருக்க வேண்டும். 

சம்பளம் : ரூ. 15,000

Data Assistant – Siddha

காலியிடங்களின் எண்ணிக்கை : 1

கல்வித் தகுதி :

Graduation in Computer Application / IT / Business Administration / B.Tech (C.S) or (IT) / BCA / BBA / B.Sc -IT / Graduation with one year Diploma / Certificate Course in computer science படித்திருக்க வேண்டும். 

சம்பளம் : ரூ. 15,000

Laboratory Technician Gr-3

காலியிடங்களின் எண்ணிக்கை : 1

கல்வித் தகுதி :

12 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். Diploma in Medical Lab Technology (DMLT) படித்திருக்க வேண்டும். 

சம்பளம் : ரூ. 13,000

தேர்வு செய்யப்படும் முறை : 

இந்தப் பணியிடங்களுக்கு நேர்முகத் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். 

விண்ணப்பிக்கும் முறை : 

இந்தப் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்புகிறவர்கள்  https://cdn.s3waas.gov.in/s3bca82e41ee7b0833588399b1fcd177c7/uploads/2025/11/17637291498260.pdf என்ற இணையதளப் பக்கத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தினை பதிவிறக்கம் செய்து பிரிண்ட் எடுத்துக் கொள்ள வேண்டும். பின்னர் விண்ணப்பத்தினை பூர்த்தி செய்து தேவையான ஆவணங்களுடன் கீழ்கண்ட முகவரிக்கு அனுப்ப வேண்டும்.

முகவரி :

நிர்வாக செயலாளர்/ மாவட்ட சுகாதார அலுவலகம், மாவட்ட நலவாழ்வுச் சங்கம், திண்டல், ஈரோடு மாவட்டம், ஈரோடு - 638012

விண்ணப்பிக்க கடைசி தேதி : 06.12.2025