நெடுஞ்சாலைத் துறையில் வேலை வாய்ப்பு அறிவிப்பு

தமிழக அரசின் நெடுஞ்சாலைத் துறையில் பல்வேறு பணியிடங்களை நிரப்புவதற்கான வேலை வாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. அந்த வகையில் கடலூர் நெடுஞ்சாலை வட்டத்தில் காலியாக உள்ள அலுவலக உதவியாளர் மற்றும் அலுவலக காவலர் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. மொத்தம் 9 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இந்தப் பணியிடங்கள் நேரடி நியமனம் அடிப்படையில் நிரப்பப்பட உள்ளன.

அலுவலக உதவியாளர்

காலியிடங்களின் எண்ணிக்கை : 5

கல்வித் தகுதி :

இந்தப் பணியிடங்களுக்கு 8 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். 

வயதுத் தகுதி :

01.10.2025 அன்று 18 வயது முதல் 37 வயதிற்குள் இருக்க வேண்டும். 

சம்பளம் : ரூ. 15,700 – 58,100

அலுவலக காவலர்

காலியிடங்களின் எண்ணிக்கை : 4

கல்வித் தகுதி :

இந்தப் பணியிடங்களுக்கு 8 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். 

வயதுத் தகுதி :

01.10.2025 அன்று 18 வயது முதல் 37 வயதிற்குள் இருக்க வேண்டும். 

சம்பளம் : ரூ. 15,700 – 58,100

தேர்வு செய்யப்படும் முறை : 

இந்தப் பணியிடங்களுக்கு நேர்முகத் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை : 

இந்தப் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்புகிறவர்கள் தங்கள் சுயவிவரக் குறிப்பு அடங்கிய விண்ணப்பத்தினை பிரிண்ட் எடுத்து, தேவையான ஆவணங்களுடன் கீழ்கண்ட முகவரிக்கு நேரிலோ அல்லது தபால் மூலமாகவோ அனுப்ப வேண்டும்.

அஞ்சல் முகவரி :

கோட்டப் பொறியாளர், நெடுஞ்சாலைத்துறை கட்டுமானம் மற்றும் பராமரிப்பு, சில்வர் பீச் ரோடு, கடலூர் - 607001

விண்ணப்பிக்க கடைசி தேதி : 15.11.2025