கரூர் மாவட்ட ஊரக வளர்ச்சித்துறையில் வேலை வாய்ப்பு அறிவிப்பு
கரூர் மாவட்டம் கிருஷ்ணராயபுரம் மற்றும் குளித்தலை ஊராட்சி ஓன்றியங்களில் காலியாக உள்ள, ஓட்டுநர் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மொத்தம் 2 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இந்த பணியிடங்கள் நேரடி நியமனம் அடிப்படையில் நிரப்பப்பட உள்ளது.
ஈப்பு ஓட்டுநர்
காலியிடங்களின் எண்ணிக்கை : 2
கல்வித் தகுதி :
8 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மோட்டார் வாகனச் சட்டத்தின்படி தகுதியான அலுவலரால் வழங்கப்பட்ட செல்லத்தக்க ஓட்டுநர் உரிமம் வைத்திருக்க வேண்டும். மேலும் 5 ஆண்டுகளுக்கு குறையாமல் முன் அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
வயதுத் தகுதி :
இந்த பணியிடங்களுக்கு 01.07.2025 அன்று 18 வயது முதல் 42 வயது வரை உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.
சம்பளம் : ரூ.19,500 – 71,900
தேர்வு செய்யப்படும் முறை :
இந்தப் பணியிடங்களுக்கு நேர்முகத் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பிக்கும் முறை :
இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்புகிறவர்கள் https://karur.nic.in/notice_category/recruitment/ என்ற இணையதளப் பக்கத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தினை பதிவிறக்கம் செய்து, பிரிண்ட் எடுத்து பூர்த்தி செய்துக் கொள்ள வேண்டும். பின்னர் விண்ணப்பத்தினை தேவையான ஆவணங்களுடன் சம்பந்தப்பட்ட ஊராட்சி ஒன்றியங்களின் முகவரிக்கு அனுப்ப வேண்டும்.
முகவரி
ஆணையர், ஊராட்சி ஒன்றிய அலுவலகம், கிருஷ்ணராயபுரம், கரூர் மாவட்டம் – 639102
ஆணையாளர், ஊராட்சி ஒன்றிய அலுவலகம், குளித்தலை, கரூர் மாவட்டம் – 639120
விண்ணப்பிக்க கட்டணம் :
ரூ. 50, Commissioner, Panchayat Union, Krishnarayapuram அல்லது Kulithalai என்ற பெயரில் வங்கி வரைவோலையாக விண்ணப்பத்துடன் அனுப்ப வேண்டும்.
விண்ணப்பிக்க கடைசி தேதி : 12.11.2025