மாவட்ட நீதிமன்றத்தில் வேலை வாய்ப்பு அறிவிப்பு
கடலூர் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு மற்றும் சிதம்பரம், விருத்தாச்சலம், பண்ருட்டி, திட்டக்குடி, பரங்கிப்பேட்டை மற்றும் குறிஞ்சிப்பாடி ஆகிய வட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழுக்களிலும் இந்தப் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. ஓய்வு பெற்ற ஆசிரியர், அரசு ஊழியர்கள், சுயஉதவிக் குழுக்கள் உள்பட பல்வேறு வகைகளில் இந்தப் பணியிடங்கள் தேர்வு செய்யப்பட உள்ளன. இந்த பணியிடங்கள் தற்காலிக அடிப்படையில் நிரப்பப்பட உள்ளன.
சட்டம் சார்ந்த தன்னார்வ தொண்டர்கள்
காலியிடங்களின் எண்ணிக்கை : 18
காலியிட விபரம்
- கடலூர் – 5
- விருத்தாச்சலம் – 1
- சிதம்பரம் – 2
- பண்ருட்டி - 4
- திட்டக்குடி – 2
- பரங்கிப்பேட்டை – 2
- குறிஞ்சிப்பாடி – 2
கல்வித் தகுதி :
எழுத்தறிவு பெற்றிருக்க வேண்டும். 10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்.
வயதுத் தகுதி :
விண்ணப்பதாரர்கள் 18 மேற்பட்டவராக இருத்தல் வேண்டும்.
சம்பளம் :
பணிபுரியும் நாட்களுக்கு நாள் ஒன்றுக்கு ரூ.750 மதிப்பூதியமாக வழங்கப்படும்.
தேர்வு செய்யப்படும் முறை :
இந்தப் பணியிடங்களுக்கு நேர்முகத் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பிக்கும் முறை :
இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்புகிறவர்கள் https://cdnbbsr.s3waas.gov.in/s3ec045b4a2146246bc3a3a941f32225bb/uploads/2025/10/2025102494.pdf என்ற இணையதளப் பக்கத்தில் கொடுப்பட்டுள்ள விண்ணப்பத்தினை பதிவிறக்கம் செய்து பிரிண்ட் எடுத்துக் கொள்ள வேண்டும். பின்னர் விண்ணப்பத்தினை பூர்த்தி செய்து தேவையான ஆவணங்களுடன் கீழ்கண்ட முகவரி அல்லது மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்ப வேண்டும்.
முகவரி :
தலைவர், மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு, கடலூர்.
விண்ணப்பிக்க கடைசி தேதி : 05.11.2025