தமிழ்நாடு மருத்துவ வாரியத்தில் வேலை வாய்ப்பு அறிவிப்பு
தமிழ்நாடு மருத்துவ வாரியத்தில் (MRB) பல் சுகாதார நிபுணர் பணியிடங்களை நிரப்ப மருத்துவ பணியாளர் தேர்வு வாரியம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. மொத்தம் 39 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இந்த பணியிடங்கள் நேரடி நியமனம் அடிப்படையில் நிரப்பப்பட உள்ளன.
பல் சுகாதார நிபுணர் (Dental Hygienist)
காலியிடங்களின் எண்ணிக்கை : 39
கல்வித் தகுதி :
12 ஆம் வகுப்பில் உயிரியல் அல்லது விலங்கியல் மற்றும் தாவரவியல் படித்து தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும் Diploma in Dental Hygienist படித்திருக்க வேண்டும்.
சம்பளம் : ரூ. 35,400 – 1,30,400
வயதுத் தகுதி :
இந்த பணியிடங்களுக்கு 01.07.2025 அன்று 32 வயது வரை உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். எஸ்.சி (SC), எஸ்.சி.ஏ (SC(A)), எஸ்.டி (ST), எம்.பி.சி (MBC & DNC), பி.சி (BC), பி.சி.எம் (BCM) பிரிவினருக்கு வயது வரம்பு கிடையாது.
தேர்வு செய்யப்படும் முறை :
இந்த பணியிடங்களுக்கு 10 ஆம் வகுப்பு, 12 ஆம் வகுப்பு மற்றும் டிப்ளமோ படிப்புகளில் பெற்ற மதிப்பெண்களின் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள். இதில் 10 ஆம் வகுப்பு மதிப்பெண்கள் 20%க்கும், 12 ஆம் வகுப்பு மதிப்பெண்கள் 30%க்கும் மற்றும் டிப்ளமோ மதிப்பெண்கள் 50%க்கும் கணக்கிடப்படும். எழுத்து தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு கிடையாது.
விண்ணப்பிக்கும் முறை :
இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்புகிறவர்கள் http://www.mrb.tn.gov.in/ என்ற இணையதளப் பக்கத்திற்குச் சென்று ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பக் கட்டணம் :
பொதுப் பிரிவினருக்கு ரூ. 600, எஸ்.சி, எஸ்.சி.ஏ, எஸ்.டி மற்றும் மாற்றுத்திறனாளி பிரிவினருக்கு ரூ. 300
விண்ணப்பிக்க கடைசி தேதி : 02.11.2025