சேலம் மாவட்ட மீனவளத் துறையில் வேலை வாய்ப்பு அறிவிப்பு
சேலம் மாவட்டம் மேட்டூர் அணை அரசு மீன் பண்ணை மீன்வள ஆய்வாளர் அலுவலகத்தில் மீன்வள உதவியாளர் பணியிடங்களை நிரப்ப வேலை வாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மொத்தம் 8 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இந்த பணியிடங்கள் நேரடி நியமனம் அடிப்படையில் நிரப்பப்பட உள்ளன.
மீன்வள உதவியாளர்
காலியிடங்களின் எண்ணிக்கை : 8
கல்வித் தகுதி :
விண்ணப்பிக்க விரும்புகிறவர்களுக்கு தமிழில் எழுதப் படிக்க மற்றும் பேச தெரிந்திருக்க வேண்டும். நீந்துதல், மீன்பிடித்தல், மீன்பீடி வலைப் பின்னுதல், பரிசல் ஓட்டுதல், வீச்சு வலை வீசுதல் மற்றும் பழுதடைந்த வலைகளை சரி செய்தல் ஆகிய தகுதிகள் பெற்றிருக்க வேண்டும்.
வயதுத் தகுதி :
01.07.2025 அன்று 32 வயதிற்குள் இருக்க வேண்டும். தமிழக அரசு விதிகளின்படி, பி.சி, எம்.பி.சி பிரிவினர் 34 வயது வரையிலும், எஸ்.சி பிரிவினர் 37 வயது வரையிலும் விண்ணப்பம் செய்யலாம்.
சம்பளம் : ரூ. 15,900 – 58,500
தேர்வு செய்யப்படும் முறை :
இந்தப் பணியிடங்களுக்கு நேர்முகத் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்
விண்ணப்பிக்கும் முறை :
இந்தப் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க தங்கள் சுயவிவரக் குறிப்பு அடங்கிய விண்ணப்பத்தினை தேவையான ஆவணங்களுடன் கீழ்கண்ட முகவரிக்கு அனுப்ப வேண்டும்.
முகவரி :
மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை துணை இயக்குநர் (மண்டலம்), 5/596, ஒளவையார் தெரு, மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரில், தருமபுரி - 636705
விண்ணப்பிக்க கடைசி தேதி : 31.10.2025