இந்திய ரயில்வே துறையில் வேலை வாய்ப்பு அறிவிப்பு
இந்திய ரயில்வேயில் செக்சன் கண்ட்ரோலர் பணியிடங்களை நிரப்புவதற்கான வேலை வாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. தற்போதைய அறிவிப்பில் நாடு முழுவதும் மொத்தம் 368 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இந்த பணியிடங்கள் நேரடி நியமனம் அடிப்படையில் நிரப்பப்பட உள்ளன.
Section Controller
காலியிடங்களின் எண்ணிக்கை : 368
கல்வித் தகுதி :
அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் ஏதேனும் ஒரு இளநிலை பட்டப்படிப்பு படித்திருக்க வேண்டும்.
வயதுத் தகுதி :
01.01.2026 அன்று 20 வயது முதல் 33 வயதிற்குள் இருக்க வேண்டும்.
சம்பளம் : ரூ. 35,400 (அடிப்படை சம்பளம்)
வயது வரம்பு தளர்வு :
மத்திய அரசு விதிகளின்படி ஓ.பி.சி பிரிவினருக்கு 3 ஆண்டுகளும், எஸ்.சி மற்றும் எஸ்.டி பிரிவினருக்கு 5 ஆண்டுகளும் வயது வரம்பில் தளர்வு உண்டு.
தேர்வு செய்யப்படும் முறை :
இந்தப் பணியிடங்களுக்கு கணினி வழித் தேர்வு மற்றும் திறனறித் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். கணினி வழித் தேர்வில் 100 கேள்விகள் 100 மதிப்பெண்களுக்கு கேட்கப்படும். இதற்கான கால அளவு 2 மணி நேரம்.
விண்ணப்பிக்கும் முறை :
இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் https://www.rrbchennai.gov.in/ என்ற இணையதள பக்கம் மூலமாக ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பிக்க கடைசி தேதி: 14.10.2025
விண்ணப்பக் கட்டணம் :
ரூ. 500. இருப்பினும் எஸ்.சி, எஸ்.டி பிரிவினர் மற்றும் பெண்களுக்கு ரூ. 250