நெடுஞ்சாலைத் துறையில் வேலை வாய்ப்பு அறிவிப்பு

தமிழக அரசின் நெடுஞ்சாலைத் துறையில் ஓட்டுநர் மற்றும் அலுவலக உதவியாளர் பணியிடங்களை நிரப்புவதற்கான வேலை வாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. அந்த வகையில் கோயம்புத்தூர் நெடுஞ்சாலை வட்டத்தில் காலியாக உள்ள ஓட்டுநர் மற்றும் அலுவலக உதவியாளர் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. மொத்தம் 2 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இந்தப் பணியிடங்கள் நேரடி நியமனம் அடிப்படையில் நிரப்பப்பட உள்ளன. 

ஓட்டுநர்

காலியிடங்களின் எண்ணிக்கை : 1

கல்வித் தகுதி :

இந்தப் பணியிடங்களுக்கு 8 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். கனரக வாகனம் அல்லது இலகுரக வாகன ஓட்டுநர் உரிமம் வைத்திருக்க வேண்டும். கனரக வாகன ஓட்டுநர் பதவிக்கு 2 ஆண்டுகள் கனரக வாகனம் இயக்கிய அனுபவச் சான்று வைத்திருக்க வேண்டும்.

வயதுத் தகுதி :

01.07.2025 அன்று 30 வயதிற்கு உட்பட்டவராகவும் இருக்க வேண்டும். இருப்பினும் தமிழக அரசு விதிகளின் எஸ்.டி, பிரிவினர் 35 வயது வரையிலும் விண்ணப்பிக்கலாம். 

சம்பளம் : ரூ. 19,500 – 71,900

அலுவலக உதவியாளர்

காலியிடங்களின் எண்ணிக்கை : 1

கல்வித் தகுதி :

இந்தப் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்புகிறவர்கள் 8 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். 

வயதுத் தகுதி :

1.07.2025 அன்று 30 வயதிற்கு உட்பட்டவராகவும் இருக்க வேண்டும். இருப்பினும் தமிழக அரசு விதிகளின் எஸ்.டி, பிரிவினர் 35 வயது வரையிலும் விண்ணப்பிக்கலாம். 

சம்பளம் : ரூ. 15,700 – 58,100

தேர்வு செய்யப்படும் முறை : 

இந்தப் பணியிடங்களுக்கு நேர்முகத் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை : 

இந்தப் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க தங்கள் சுயவிவரக் குறிப்பு அடங்கிய விண்ணப்பத்தினை பிரிண்ட் எடுத்து, தேவையான ஆவணங்களுடன் கீழ்கண்ட முகவரிக்கு நேரிலோ அல்லது தபால் மூலமாகவோ அனுப்ப வேண்டும்.

அஞ்சல் முகவரி 

ஓட்டுநர் பதவிக்கு :

கண்காணிப்பு பொறியாளர், நெடுஞ்சாலை க(ம)ப, ஏ.ஆர்.லைன் ரோடு, திருநெல்வேலி - 627002

அலுவலக உதவியாளர் பதவிக்கு :

கோட்டப் பொறியாளர், நெடுஞ்சாலை க(ம)ப, ஏ.ஆர்.லைன் ரோடு, திருநெல்வேலி - 627002

விண்ணப்பிக்க கடைசி தேதி : 23.10.2025