ரெப்கோ வங்கியில் வேலை வாய்ப்பு அறிவிப்பு
இந்திய அரசின் பொத்துறை வங்கிகளுள் ஒன்றான ரெப்கோ வங்கி அசிஸ்டெண்ட் மேனேஜர் மற்றும் டிரான்சிலேட்டர் பணியிடங்களை நிரப்ப உள்ளது. மொத்தம் 3 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.
Assistant Manager (Legal)
காலியிடங்களின் எண்ணிக்கை : 2
கல்வித் தகுதி :
அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் Graduate in Law படித்திருக்க வேண்டும். மேலும் 2 ஆண்டுகள் பணி அனுபவம் அவசியம்.
வயதுத் தகுதி : விண்ணப்பதாரர் 01.10.2025 அன்று 30 வயதிற்குள் இருக்க வேண்டும்.
சம்பளம் :
48480 – 2000/7 – 62480 – 2340/2 – 67160 – 2680/7 – 85920
Temporary Translator/ Typist (Hindi)
காலியிடங்களின் எண்ணிக்கை : 1
கல்வித் தகுதி : விண்ணப்பிக்க விரும்புகிறவர்கள் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் இளநிலை பட்டப்படிப்பு படித்திருக்க வேண்டும். ஹிந்தியில் முதுநிலை முடித்திருக்க வேண்டும்.
வயதுத் தகுதி :
விண்ணப்பதாரர் 01.10.2025 அன்று 21 வயது முதல் 28 வயதிற்குள் இருக்க வேண்டும்.
சம்பளம் : 20,000
தேர்வு செய்யப்படும் முறை :
இந்த பணியிடங்களுக்கு எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பிக்கும் முறை :
இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்புகிறவர்கள் https://repcobank.com/ என்ற இணையதள பக்கம் மூலமாக ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பக் கட்டணம் : ரூ. 1200
விண்ணப்பிக்க கடைசி தேதி : 22.10.2025
இந்த வேலை வாய்ப்பு தொடர்பாக மேலும் விவரங்கள் அறிய https://www.repcobank.com/careers என்ற இணையதளப் பக்கத்தில் கொடுக்கப்பட்டுள்ள அறிவிப்பினைப் பார்வையிடவும்.