தமிழ்நாடு அரசு ஊரக வளர்ச்சித் துறையில் வேலை வாய்ப்பு அறிவிப்பு
தமிழ்நாடு அரசின் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையில் அலுவலக உதவியாளர், பதிவறை எழுத்தர், இரவுக் காவலர், ஓட்டுனர் ஆகிய பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மொத்தம் 365 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இந்த பணியிடங்கள் நேரடி நியமனம் அடிப்படையில் நிரப்பப்பட உள்ளன.
காலியிடங்களின் விபரம்
- அரியலூர் – 7
- செங்கல்பட்டு – 6
- கோயம்புத்தூர் – 12
- கடலூர் – 7
- தருமபுரி – 7
- திண்டுக்கல் – 7
- ஈரோடு – 16
- கள்ளக்குறிச்சி – 13
- காஞ்சிபுரம் – 5
- கன்னியாகுமரி – 6
- கரூர் – 10
- கிருஷ்ணகிரி – 9
- மதுரை – 9
- நாகப்பட்டினம் – 5
- நாமக்கல் – 7
- நீலகிரி – 3
- பெரம்பலூர் – 2
- புதுக்கோட்டை – 7
- ராமநாதபுரம் – 5
- ராணிப்பேட்டை – 12
- சேலம் – 19
- சிவகங்கை – 14
- தென்காசி – 12
- தஞ்சாவூர் – 4
- தேனி – 7
- திருப்பத்தூர் – 15
- திருவாரூர் – 5
- திருநெல்வேலி - 6
- தூத்துக்குடி – 3
- திருப்பூர் – 21
- திருவள்ளூர் – 22
- திருவண்ணாமலை – 23
- திருச்சி – 15
- வேலூர் – 11
- விழுப்புரம் – 24
- விருதுநகர் – 12
பதிவறை எழுத்தர்
கல்வித் தகுதி :
விண்ணப்பதாரர்கள் 10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
சம்பளம் : ரூ. 15,900 – 58,500
அலுவலக உதவியாளர்
கல்வித் தகுதி :
8 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மிதிவண்டி ஓட்டத் தெரிந்திருக்க வேண்டும்.
சம்பளம் : ரூ. 15,700 – 58,100
ஈப்பு ஓட்டுநர்
வயதுத் தகுதி :
01.07.2025 அன்று 18 வயது முதல் 32 வயதிற்குள் இருக்க வேண்டும்.
சம்பளம் :
ரூ. 19,500 – 71,900
இரவுக் காவலர்
கல்வித் தகுதி :
விண்ணப்பிக்க விரும்புகிறவர்கள் தமிழில் எழுதப் படிக்கத் தெரிந்திருக்க வேண்டும்.
சம்பளம் : ரூ. 15,700 – 58,100
வயதுத் தகுதி :
01.07.2025 அன்று 18 வயது முதல் 32 வயதிற்குள் இருக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை :
இந்தப் பணியிடங்களுக்கு நேர்முகத் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பிக்கும் முறை :
இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் https://tnrd.tn.gov.in/ என்ற இணையதளப் பக்கத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தினை பதிவிறக்கம் செய்து பிரிண்ட் எடுத்துக் கொள்ள வேண்டும். பின்னர் விண்ணப்பத்தினை பூர்த்தி செய்து தேவையான ஆவணங்களுடன் சம்பந்தப்பட்ட ஊராட்சி ஒன்றிய அலுவலகங்களுக்கு அனுப்ப வேண்டும்.
விண்ணப்பிக்க கடைசி தேதி : 30.09.2025