தமிழ்நாடு மருத்துவ வாரியத்தில் வேலை வாய்ப்பு அறிவிப்பு
தமிழ்நாடு மருத்துவ வாரியத்தில் (MRB) உதவி மருத்துவ அலுவலர் (ஆயுர்வேதம்) பணியிடங்களை நிரப்ப மருத்துவ பணியாளர் தேர்வு வாரியம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. மொத்தம் 8 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இந்த பணியிடங்கள் நேரடி நியமனம் அடிப்படையில் நிரப்பப்பட உள்ளன.
உதவி மருத்துவ அலுவலர் (ஆயுர்வேதம்) (Assistant Medical Officer (Ayurveda))
காலியிடங்களின் எண்ணிக்கை : 8
கல்வித் தகுதி :
HPIM (Ayurveda) or GCIM (Ayurveda) or L.I.M. (Ayurveda) or a degree in B.A.M.S. படித்திருக்க வேண்டும்.
சம்பளம் : ரூ. 56,100 – 2,05,700
வயதுத் தகுதி :
இந்த பணியிடங்களுக்கு 01.07.2025 அன்று 37 வயது வரை உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். எஸ்.சி (SC), எஸ்.சி.ஏ (SC(A)), எஸ்.டி (ST), எம்.பி.சி (MBC&DNC), பி.சி (BC), பி.சி.எம் (BCM) பிரிவினருக்கு வயது வரம்பு கிடையாது.
தேர்வு செய்யப்படும் முறை :
இந்த பணியிடங்களுக்கு கொள்குறி வகை வினாக்கள் அடங்கிய தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள். இந்தத் தேர்வு இரண்டு பகுதிகளாக நடைபெறும். முதல் பகுதி தமிழ் மொழித் தகுதித் தேர்வு. இது 50 மதிப்பெண்களுக்கு நடைபெறும். இதில் 20 மதிப்பெண்கள் பெற்றால் தான் முதன்மைத் தாள் மதிப்பீட்டுக்கு எடுத்துக் கொள்ளப்படும். தமிழ் தேர்வுக்கான கால அளவு ஒரு மணி நேரம்.
இரண்டாம் தாள் ஆயுர்வேத மருத்துவம் சார்ந்த கேள்விகளுடன் 100 மதிப்பெண்களுக்கு நடைபெறும். இந்தத் தேர்வுக்கான கால அளவு 2 மணி நேரம். இந்த தாளில் பெறும் மதிப்பெண்களே மதிப்பீட்டுக்கு எடுத்துக் கொள்ளப்படும்.
விண்ணப்பிக்கும் முறை :
இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்புகிறவர்கள் http://www.mrb.tn.gov.in/ என்ற இணையதளப் பக்கத்திற்குச் சென்று ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பக் கட்டணம் :
பொதுப் பிரிவினருக்கு ரூ. 1000, எஸ்.சி, எஸ்.சி.ஏ, எஸ்.டி மற்றும் மாற்றுத்திறனாளி பிரிவினருக்கு ரூ. 500
விண்ணப்பிக்க கடைசி தேதி : 18.09.2025