BHEL Jobs 2025 : பெல் நிறுவனத்தில் நிரந்தர வேலை வாய்ப்பு அறிவிப்பு

திருச்சி, ராணிப்பேட்டை உட்பட நாட்டின் 11 இடங்களில் அமைந்துள்ள பெல் (BHEL) நிறுவனத்தில் ஐ.டி.ஐ படித்தவர்களுக்கான காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்திய பொதுத்துறை நிறுவனமான பாரத் ஹெவி எலக்ட்ரிக்கல் லிமிடெட் (Bharat Heavy Electricals Limited), நிறுவனத்தில் கைவினைஞர் பணியிடங்களுக்கு தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக பெல் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. மொத்தம் 515 இடங்களுக்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

Artisans Grade IV

மொத்த பயிற்சி இடங்களின் எண்ணிக்கை: 515

  1. Fitter – 176
  2. Welder – 97
  3. Turner – 51
  4. Machinist – 104
  5. Electrician – 65
  6. Electronics Mechanic – 18
  7. Foundryman – 4

வயதுத் தகுதி : 

01.07.2025 அன்று 27 வயதிற்கு உட்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம். இருப்பினும் ஓ.பி.சி பிரிவினர் 30 வயது வரையிலும், எஸ்.சி, எஸ்.டி பிரிவினர் 32 வயது வரையிலும் விண்ணப்பிக்கலாம்.

கல்வி தகுதி : 

விண்ணப்பதாரர்கள் 10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும் சம்பந்தப்பட்ட பிரிவில் ஐ.டி.ஐ முடித்திருக்க வேண்டும்.

சம்பளம் : ரூ. 29,500 – 65,000

தேர்வு செய்யப்படும் முறை : 

இந்தப் பணியிடங்களுக்கு கணினி வழித் தேர்வு மற்றும் திறனறி தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை : 

இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்புகிறவர்கள்  https://careers.bhel.in/ என்ற இணையதள பக்கம் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பக்க கட்டணம் :

பொதுப் பிரிவு மற்றும் ஓ.பி.சி பிரிவினருக்கு ரூ. 1072, எஸ்.சி, எஸ்.டி, மாற்றுத்திறனாளிகள் மற்றும் முன்னாள் இராணுவத்தினர் பிரிவினருக்கு ரூ. 472

விண்ணப்பிக்க கடைசி தேதி : 15.09.2025