இந்திய உளவுத்துறையில் பாதுகாப்பு உதவியாளர் பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு :

இந்திய அரசின் உள்துறை அமைச்சகத்தின் கீழ் செயல்பட்டு வரும் உளவுத்துறையில் பாதுகாப்பு உதவியாளர் (Security Assistant (Motor Transport) பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. மொத்தம் 455 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இதில் சென்னையில் 11 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. 

Security Assistant (Motor Transport)

காலியிடங்களின் எண்ணிக்கை : 455

கல்வித் தகுதி :

10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். இலகுரக வாகன ஓட்டுநர் உரிமம் வைத்திருக்க வேண்டும்.

வயதுத் தகுதி :

28.09.2025 அன்று 18 வயது முதல் 27 வயது வரை உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். இருப்பினும் எஸ்.சி, எஸ்.டி (SC/ST) பிரிவுகளுக்கு 5 ஆண்டுகளும், ஓ.பி.சி (OBC) பிரிவுக்கு 3 ஆண்டுகளும் வயது வரம்பில் தளர்வு உண்டு.

சம்பளம் : ரூ. 21,700 – 69,100

தேர்வு செய்யப்படும் முறை : 

இந்தப் பணியிடங்களுக்கு எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் நேர்முகத் தேர்வுக்கு செய்யப்படுவார்கள். 

எழுத்துத் தேர்வு இரண்டு பகுதிகளாக நடைபெறும். முதல் பகுதி 100 மதிப்பெண்களுக்கு நடைபெறும். இதில் ஆங்கிலம் (English language), திறனறிதல் (Reasoning ability) மற்றும் கணிதம் (Numerical ability) பொது அறிவு (General Awareness) பொதுப் பாடம் (General Studies) ஆகிய பிரிவுகளில் இருந்து தலா 20 கேள்விகள் என மொத்தம் 100 கேள்விகள் இடம்பெறும். இதற்கான கால அளவு 1 மணி நேரம் ஆகும். இதில் தகுதி பெற்றவர்களுக்கு நேர்முகத் தேர்வு நடைபெறும்.

விண்ணப்பிக்கும் முறை :

 இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்புகிறவர்கள்  www.mha.gov.in என்ற இணையதளப் பக்கம் மூலமாக ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். 

விண்ணப்பிக்க கடைசி தேதி: 28.09.2025

விண்ணப்பக் கட்டணம் :

தேர்வுக் கட்டணம் ரூ.100, விண்ணப்பக் கட்டணம் ரூ. 550. எஸ்.சி/ எஸ்.டி, பெண்கள், மாற்றுத்திறனாளி பிரிவினருக்கு தேர்வு கட்டணத்தில் விலக்கு உண்டு.