நெட் தேர்வு தேதியில் மாற்றம்: முக்கிய அறிவிப்பை வெளியிட்ட யுஜிசி
பல்வேறு தரப்பினருடம் இருந்து பெறப்பட்ட கோரிக்கைகள் அடிப்படையில், யுஜிசி-நெட் தகுதித்தேர்வை (UGC- NET Exam For Assistant Professor’ as well as ‘Junior Research Fellowship and Assistant Professor) ஜூன் 18ம் தேதிக்கு ஒத்திவைக்கப்படுவதாக பல்கலைக்கழக மானியக் குழு (யுஜிசி) அறிவித்துள்ளது.

முன்னதாக, 2024 வருட டிசம்பர் மாதத்துக்கான உதவிப் பேராசிரியர் மற்றும் அல்லது இளநிலை ஆராய்ச்சி நிதியுதவி விருதுக்கான தகுதித்தேர்வை (UGC- NET Exam For Assistant Professor’ as well as ‘Junior Research Fellowship and Assistant Professor) பல்கலைக்கழக மானியக் குழு அறிவித்துள்ளது. 83 பாடங்களுக்கான கணினி வழி எழுத்துத் தேர்வு ஜூன்16ம் தேதி நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டது. இந்நிலையில், பெற்றோர் மற்றும் மாணவர்களிடம் இருந்து பெறப்பட்ட கோரிக்கையின் அடிப்படையில், ஜூன் 18ம் தேதி தேர்வு நடைபெறும் என்று யூஜிசி அறிவித்துள்ளது.
உடனே விண்ணப்பியுங்கள்: இந்தியப் பல்கலைக்கழகம் மற்றும் கல்லூரிகளில் உதவி பேராசிரியராக நீங்கள் பணி செய்ய வேண்டும் என்று உங்கள் ஆர்வம் இருந்தால் நீங்கள் இத்தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம். மேலும், கல்லூரிகளில் இளையர் இளநிலை ஆராய்ச்சியாளர் (Junior Research Fellowship) உதவித்தொகை பெற வேண்டும் என்றாலும் நீங்கள் இத்தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம்.
விண்ணப்பம் செய்வது எப்படி? இத்தேர்வுக்கு https://ugcnet.nta.nic.in/ மற்றும் https://nta.ac.in/ என்ற இணையத்தளத்தில் மே 10ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.
தேர்வு முறை: நெட் தேர்வு , இரண்டு தாள்களை கொண்டது. தாள் 1-ல் 50 கேள்விகள் கேட்கப்படும். இது, விண்ணப்பதாரின் ஆராய்ச்சி மனப்பான்மையை சோதிக்கும் வகையில் இருக்கும். காரணங்காணல் (Logical Reasoning), பொது அறிவு (Current Affairs) தொடர்பான கேள்விகள் இடம்பெறும். இரண்டாவது தாளில், 100 கேள்விகள் கேட்கப்படும். இதில், விண்ணப்பதாரர் தேர்தெடுத்த பாடப்பிரிவுகளில் இருந்து கேள்விகள் இடம்பெறும்.
உதவிப் பேராசிரியர் பணிக்கு,குறைந்தபட்ச மதிப்பெண்களைப் பெற்ற தேர்வாளர்களில், இரண்டு தாள்களின் மொத்த மதிப்பெண்களைப் பயன்படுத்தி ஒரு தகுதி பட்டியல் பாடவாரியாகவும் இனவகை வாரியாகவும் தயாரிக்கப்படும்.