தேனி மாவட்ட சமூக நலத்துறையில் வேலை வாய்ப்பு அறிவிப்பு

தேனி மாவட்ட சமூக நலத்துறையில் குழந்தைகள் நலன் மற்றும் சிறப்பு சேவைகள் துறையின் கீழ் செயல்படும் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு மையத்தில் மேற்பார்வையாளர் பணியிடத்தை நிரப்ப வேலை வாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்த பணியிடம் தற்காலிக நியமனம் அடிப்படையில் நிரப்பப்பட உள்ளன. 

மேற்பார்வையாளர் (Supervisor)

காலியிடங்களின் எண்ணிக்கை: 1

கல்வித் தகுதி :

B.A in Social Work/ in Computer Science / Information Technology/ Community Sociology/ Social Sciences படித்திருக்க வேண்டும். பணிபுரிந்த அனுபவம் உள்ளவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும்.

வயதுத் தகுதி :

இந்தப் பணியிடங்களுக்கு 42 வயது வரை உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

சம்பளம் : ரூ. 21,000

தேர்வு செய்யப்படும் முறை : 

இந்தப் பணியிடங்களுக்கு நேர்முகத் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை : 

இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்புகிறவர்கள்  https://cdn.s3waas.gov.in/s39a96876e2f8f3dc4f3cf45f02c61c0c1/uploads/2025/08/17562073578664.pdf என்ற இணையதளப் பக்கத்தில் கொடுப்பட்டுள்ள விண்ணப்பத்தினை பிரிண்ட் எடுத்துக் கொள்ள வேண்டும். பின்னர் விண்ணப்பத்தினை பூர்த்தி செய்து தேவையான ஆவணங்களுடன் கீழ்கண்ட முகவரிக்கு அனுப்ப வேண்டும். இந்தப் பணிக்கு பெண்கள் மட்டுமே விண்ணப்பிக்க தகுதியானவர்கள் ஆவர்.

முகவரி :

District Child Protection Officer, District Child Protection Office, District Block Level Officer Building II, Collectorate Campus, District Employment Office Upstairs, Theni - 625531

விண்ணப்பிக்க கடைசி தேதி : 12.09.2025