இராணிப்பேட்டை மாவட்ட சுகாதாரத் துறையில் வேலை வாய்ப்பு அறிவிப்பு

இராணிப்பேட்டை மாவட்ட சுகாதாரத் துறையில் மாவட்ட நலச்சங்கம் கீழ் செயல்படும் மருத்துவமனைகளில் பல்வேறு பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. மொத்தம் 40 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இந்த பணியிடங்கள் தற்காலிக நியமனம் அடிப்படையில் நிரப்பப்பட உள்ளன. 

Staff Nurse

காலியிடங்களின் எண்ணிக்கை : 31

கல்வித் தகுதி :

Diploma in General Nursing and Midwifery (DGNM) or B.Sc., Nursing படித்திருக்க வேண்டும். 

சம்பளம் : ரூ. 18,000

Lab Technician

காலியிடங்களின் எண்ணிக்கை : 5

கல்வித் தகுதி :

12 ஆம் வகுப்பில் அறிவியல் பாடங்கள் படித்து தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும் Medical Laboratory Technology Course or Diploma in Medical Lab Technology படித்திருக்க வேண்டும்.

சம்பளம் : ரூ. 13,000

Pharmacist

காலியிடங்களின் எண்ணிக்கை : 1

கல்வித் தகுதி :

A Diploma in Pharmacy or Bachelor of Pharmacy or Pharm. D படித்திருக்க வேண்டும். 

சம்பளம் : ரூ. 15,000

Health Inspector Gr-II

காலியிடங்களின் எண்ணிக்கை : 1

கல்வித் தகுதி :

12 ஆம் வகுப்பில் அறிவியல் பாடங்கள் படித்து தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும் Multipurpose Health Worker (Male)/ Health Inspector/ Sanitary Inspector Course training படித்திருக்க வேண்டும்.

சம்பளம் : ரூ. 14,000

Multipurpose Hospital Worker

காலியிடங்களின் எண்ணிக்கை : 2

கல்வித் தகுதி :

விண்ணப்பதாரர்கள் 8 ஆம் வகுப்பு படித்திருக்க வேண்டும். தமிழில் எழுதப் படிக்கத் தெரிந்திருக்க வேண்டும்.

சம்பளம் : ரூ. 8,500

தேர்வு செய்யப்படும் முறை : 

இந்தப் பணியிடங்களுக்கு நேர்முகத் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். 

விண்ணப்பிக்கும் முறை : 

இந்தப் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்புகிறவர்கள்  https://cdn.s3waas.gov.in/s32723d092b63885e0d7c260cc007e8b9d/uploads/2025/08/17555133552468.pdf என்ற இணையதளப் பக்கத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தினை பிரிண்ட் எடுத்து, பூர்த்தி செய்து தேவையான ஆவணங்களுடன் கீழ்கண்ட முகவரிக்கு அனுப்ப வேண்டும்.

முகவரி :

நிர்வாகச் செயலாளர், மாவட்ட நலவாழ்வுச் சங்கம், பி பிளாக், 3வது தளம், மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகம், இராணிப்பேட்டை மாவட்டம் - 632403

விண்ணப்பிக்க கடைசி தேதி : 01.09.2025