தமிழ்நாடு காவல்துறையில் வேலை வாய்ப்பு அறிவிப்பு
தமிழக இளைஞர்கள் ஆர்வத்துடன் காத்திருந்த போலீஸ் கான்ஸ்டபிள் பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளிவந்துள்ளது. தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வு வாரியம் (TAMIL NADU UNIFORMED SERVICES RECRUITMENT BOARD) இந்த இரண்டாம் நிலை காவலர் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வு வாரியம் இரண்டாம் நிலை காவலர், சிறைத்துறை இரண்டாம் நிலைக் காவலர், தீயணைப்பு வீரர்கள் உள்ளிட்டப் பணியிடங்களை நிரப்ப உள்ளது. இந்த அறிவிப்பில் தமிழகம் முழுவதும் மொத்தம் 3,665 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.
இரண்டாம் நிலை காவலர் (Police Constable)
மொத்த காலியிடங்களின் எண்ணிக்கை : 3,665
காலியிடங்களின் விவரம்
- காவல்துறை இரண்டாம் நிலைக் காவலர் - 2833
- சிறை மற்றும் சீர்திருத்தத்துறை இரண்டாம் நிலைக் காவலர்: 180 (ஆண்கள் – 142, பெண்கள் – 38)
- தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறை தீயணைப்பாளர்: 631 (ஆண்கள் மட்டும்)
பற்றாக்குறை காலியிடங்கள் - 21
வயதுத் தகுதி :
01.07.2025 அன்று 18 முதல் 26 வயதிற்குள் இருக்க வேண்டும். இருப்பினும் பி.சி (BC), பி.சி.எம் (BC (M)), எம்.பி.சி/ டி.என்.சி (MBC/DNC) பிரிவினர் 28 வயது வரையிலும், எஸ்.சி (SC), எஸ்.சி.ஏ (SC(A)), எஸ்.டி (ST) மற்றும் திருநங்கைகள் 31 வயது வரையிலும் விண்ணப்பிக்கலாம்.
கல்வித் தகுதி :
விண்ணப்பிக்க விருப்புகிறவர்கள் 10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
சம்பளம்: ரூ.18,200 – 67,100
தேர்வு செய்யப்படும் முறை :
இந்த பணியிடங்களுக்கு எழுத்துத் தேர்வு, சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் உடற்தகுதித் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.
எழுத்துத் தேர்வு
எழுத்துத் தேர்வு இரண்டு பகுதிகளாக நடைபெறும். முதல் பகுதி தமிழ் மொழித் தகுதித் தேர்வு. இது 80 மதிப்பெண்களுக்கு நடத்தப்படும். இதில் குறைந்தபட்சம் 40% அல்லது 32 மதிப்பெண்கள் பெற வேண்டும். இல்லையென்றால் இரண்டாம் பகுதி மதிப்பீடு செய்யப்படாது.
இரண்டாம் பகுதியில் பொது அறிவு மற்றும் உளவியல் சார்ந்த வினாக்கள் கேட்கப்படும். இது 70 மதிப்பெண்களுக்கு நடத்தப்படும். எழுத்துத் தேர்வு கொள்குறி வகை வினாக்கள் அடங்கியதாக இருக்கும்.
உடற்தகுதி தேர்வு
எழுத்து தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் சான்றிதழ் சரிபார்ப்புக்கு அழைக்கப்படுவார்கள். பின்னர் அதில் தகுதி பெறுபவர்களுக்கு உடற்தகுதி தேர்வு நடைபெறும். இது 24 மதிப்பெண்களுக்கு நடத்தப்படும்.
NCC அல்லது NSS அல்லது விளையாட்டில் சிறந்து விளங்குபவர்களுக்கு சிறப்பு மதிப்பெண்களாக தலா 2 மதிப்பெண்கள் என மொத்தம் 6 மதிப்பெண்கள் வழங்கப்படும். எழுத்துத் தேர்வு, உடற்தகுதித் தேர்வு, மற்றும் சிறப்பு மதிப்பெண்கள் என மொத்தம் 100 மதிப்பெண்களுக்கு தேர்வு செயல்முறை இருக்கும். தேர்வர்கள் 100 மதிப்பெண்களுக்கு பெறும் மதிப்பெண்கள் அடிப்படையில், வேலை வழங்கப்படும்.
விண்ணப்பக் கட்டணம் : ரூ.250
விண்ணப்பிக்கும் முறை :
இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்புகிறவர்கள் https://www.tnusrb.tn.gov.in/ என்ற இணையதள பக்கத்திற்குச் சென்று ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பிக்க கடைசி தேதி : 21.09.2025