தஞ்சாவூர் மாவட்ட சுகாதாரத் துறையில் வேலை வாய்ப்பு அறிவிப்பு
தஞ்சாவூர் மாவட்ட சுகாதாரத் துறையின் கீழ் செயல்படும் ஊரக அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் பல்வேறு பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. மொத்தம் 107 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இந்த பணியிடங்கள் தற்காலிக நியமனம் அடிப்படையில் நிரப்பப்பட உள்ளன.
செவிலியர் (Staff Nurse)
காலியிடங்களின் எண்ணிக்கை : 100
கல்வித் தகுதி :
Diploma in General Nursing and Midwifery (DGNM) or B.Sc., Nursing படித்திருக்க வேண்டும்.
வயதுத் தகுதி :
இந்தப் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க 40 வயதிற்குள் இருக்க வேண்டும்.
சம்பளம் : ரூ. 18,000
ஆய்வக நுட்புனர் (Lab Technician)
காலியிடங்களின் எண்ணிக்கை : 3
கல்வித் தகுதி :
12 ஆம் வகுப்பில் அறிவியல் பாடங்கள் படித்து தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும் Medical Laboratory Technology Course படித்திருக்க வேண்டும்.
வயதுத் தகுதி :
இந்தப் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க 40 வயதிற்குள் இருக்க வேண்டும்.
சம்பளம் : ரூ. 13,000
மருந்தாளுநர் (Pharmacist)
காலியிடங்களின் எண்ணிக்கை : 1
கல்வித் தகுதி :
Diploma in Pharmacy or Bachelor of Pharmacy or Pharm. D படித்திருக்க வேண்டும்.
வயது தகுதி :
இந்தப் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க 40 வயதிற்குள் இருக்க வேண்டும்.
சம்பளம் : ரூ. 15,000
சுகாதார ஆய்வாளர் (Health Inspector Grade - II)
காலியிடங்களின் எண்ணிக்கை : 1
கல்வித் தகுதி :
12 ஆம் வகுப்பில் அறிவியல் பாடங்கள் படித்து தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும் MLHP worker (Male) / HI / SI Course training படித்திருக்க வேண்டும்.
வயதுத் தகுதி :
இந்தப் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க 40 வயதிற்குள் இருக்க வேண்டும்.
சம்பளம் : ரூ. 14,000
பல்நோக்கு மருத்துவமனை பணியாளர் (Multipurpose Hospital Worker)
காலியிடங்களின் எண்ணிக்கை : 2
கல்வித் தகுதி :
8 ஆம் வகுப்பு படித்திருக்க வேண்டும். தமிழில் எழுதப் படிக்கத் தெரிந்திருக்க வேண்டும்.
வயதுத் தகுதி :
இந்தப் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க 40 வயதிற்குள் இருக்க வேண்டும்.
சம்பளம் : ரூ. 8,500
தேர்வு செய்யப்படும் முறை :
இந்தப் பணியிடங்களுக்கு நேர்முகத் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பிக்கும் முறை :
இந்தப் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்புகிறவர்கள் https://cdn.s3waas.gov.in/s3b7b16ecf8ca53723593894116071700c/uploads/2025/08/17540551308019.pdf என்ற இணையதளப் பக்கத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தினை பிரிண்ட் எடுத்து, பூர்த்தி செய்து தேவையான ஆவணங்களுடன் கீழ்கண்ட முகவரிக்கு அனுப்ப வேண்டும்.
முகவரி :
செயற்செயலாளர், மாவட்ட நலவாழ்வுச் சங்கம் மற்றும் மாவட்ட சுகாதார அலுவலர், மாவட்ட சுகாதார அலுவலகம், காந்திஜி ரோடு, எல்.ஐ.டி பில்டிங் அருகில், தஞ்சாவூர் - 613001
விண்ணப்பிக்க கடைசி தேதி : 20.08.2025