திருநெல்வேலி மாவட்ட சுகாதாரத் துறையில் வேலை வாய்ப்பு அறிவிப்பு

திருநெல்வேலி மாவட்ட சுகாதாரத் துறையில் தேசிய சுகாதார திட்டத்தில் பல்வேறு பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. மொத்தம் 45 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இந்த பணியிடங்கள் தற்காலிக நியமனம் அடிப்படையில் நிரப்பப்பட உள்ளன.

செவிலியர் (Staff Nurse)

காலியிடங்களின் எண்ணிக்கை: 7

கல்வித் தகுதி :

Diploma in GNM/ B.Sc Nursing படித்திருக்க வேண்டும்.

வயதுத் தகுதி :

32 வயது வரை உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

சம்பளம் : ரூ. 18,000

மருந்தாளுநர் (Pharmacist)

காலியிடங்களின் எண்ணிக்கை : 2

கல்வித் தகுதி :

Diploma in Pharmacy / Bachelor of Pharmacy படித்திருக்க வேண்டும். 

வயதுத் தகுதி :

45 வயது வரை உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

சம்பளம் : ரூ. 32,000

சுகாதார ஆய்வாளர் (Health Inspector)

காலியிடங்களின் எண்ணிக்கை: 1

கல்வித் தகுதி:

விண்ணப்பதாரர்கள் 12 ஆம் வகுப்பில் அறிவியல் பாடங்கள் படித்து தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும் Multipurpose health worker course படித்திருக்க வேண்டும்.

வயதுத் தகுதி :

32 வயது வரை உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

சம்பளம் : ரூ. 14,000

ஆய்வக நுட்புனர் (Lab Technician) 

காலியிடங்களின் எண்ணிக்கை: 2

கல்வித் தகுதி :

12 ஆம் வகுப்பில் அறிவியல் பாடங்கள் படித்து தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும் Diploma in Laboratory Technician படித்திருக்க வேண்டும்.

வயதுத் தகுதி :

32 வயது வரை உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

சம்பளம் : ரூ. 8,500

நகர்ப்புற சுகாதார செவிலியர் (Urban Health Nurse/ Auxiliary Nurse)

காலியிடங்களின் எண்ணிக்கை : 29

கல்வித் தகுதி :

12 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். அல்லது ANM படித்திருக்க வேண்டும்.

வயதுத் தகுதி :

40 வயது வரை உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

சம்பளம் : ரூ. 14,000

பல்நோக்கு மருத்துவமனை பணியாளர் (Multipurpose Hospital Worker) 

காலியிடங்களின் எண்ணிக்கை: 4

கல்வித் தகுதி :

விண்ணப்பிக்க விரும்புகிறவர்கள் தமிழில் எழுதப் படிக்கத் தெரிந்திருக்க வேண்டும்.

வயதுத் தகுதி : 45 வயது வரை உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

சம்பளம் : ரூ. 8,500

தேர்வு செய்யப்படும் முறை :

 இந்தப் பணியிடங்களுக்கு நேர்முகத் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். 

விண்ணப்பிக்கும் முறை : 

இந்தப் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்புகிறவர்கள்  https://forms.zohopublic.in/collrtnv/form/DistrictHealthSocietyTirunelveliNHM28072025/formperma/ddJi5YFiPDyVDt4MR0n8dC_BTWcikd3TQsabiAZykqw என்ற இணையதளப் பக்கம் மூலமாக ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பிக்க கடைசி தேதி : 11.08.2025