புதுக்கோட்டை மாவட்ட சுகாதாரத் துறையில் வேலை வாய்ப்பு அறிவிப்பு
புதுக்கோட்டை மாவட்ட சுகாதாரத் துறையில் தேசிய சுகாதார திட்டத்தின் கீழ் செயல்படும் அரசு மருத்துவமனைகளில் பல்வேறு பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. மொத்தம் 129 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இந்த பணியிடங்கள் தற்காலிக நியமனம் அடிப்படையில் நிரப்பப்பட உள்ளன.
செவிலியர் (Staff Nurse)
காலியிடங்களின் எண்ணிக்கை : 114
கல்வித் தகுதி :
B.Sc (Nursing)/ DGNM படித்திருக்க வேண்டும்.
சம்பளம் : ரூ. 18,000
நகர சுகாதார செவிலியர் (UHN / ANM)
காலியிடங்களின் எண்ணிக்கை : 3
கல்வித் தகுதி :
12 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். ANM Course படித்திருக்க வேண்டும்.
சம்பளம் : ரூ. 14,000
மருந்தாளுநர் (Pharmacist)
காலியிடங்களின் எண்ணிக்கை : 1
கல்வித் தகுதி :
B. Pharm/ D.Pharm படித்திருக்க வேண்டும்.
சம்பளம் : ரூ. 15,000
ஆய்வக நுட்புனர் (Lab Technician)
காலியிடங்களின் எண்ணிக்கை: 7
கல்வித் தகுதி :
C.M.L.T, படித்திருக்க வேண்டும்.
சம்பளம் : ரூ. 13,000
மருத்துவமனை பணியாளர் (Hospital Worker/ Support staff)
காலியிடங்களின் எண்ணிக்கை : 2
கல்வித் தகுதி :
8 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
சம்பளம் : ரூ. 8,500
இடைநிலை சுகாதாரப் பணியாளர் (MLHP)
காலியிடங்களின் எண்ணிக்கை : 2
கல்வித் தகுதி :
B.Sc., (Nursing) / DGNM படித்திருக்க வேண்டும்.
சம்பளம் : ரூ. 18,000
வயதுத் தகுதி :
இந்தப் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்புகிறவர்கள் 35 வயதிற்கு மிகாமல் இருக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை :
இந்தப் பணியிடங்களுக்கு நேர்முகத் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பிக்கும் முறை :
இந்தப் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்புகிறவர்கள் https://cdn.s3waas.gov.in/s342e7aaa88b48137a16a1acd04ed91125/uploads/2025/07/17531766246360.pdf என்ற இணையதளப் பக்கத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தினை பிரிண்ட் எடுத்து, பூர்த்தி செய்து தேவையான ஆவணங்களுடன் கீழ்கண்ட முகவரிக்கு அனுப்ப வேண்டும்.
முகவரி :
புதுக்கோட்டை மாவட்ட சுகாதார அலுவலகம், பழைய பேருந்து நிலையம் அருகில், நீதிமன்ற வளாகத்திற்கு எதிரில், மதுரை ரோடு, புதுக்கோட்டை - 622001
விண்ணப்பிக்க கடைசி தேதி : 31.07.2025