கடலூர் மாவட்ட சமூக நலத்துறையில் வேலை வாய்ப்பு அறிவிப்பு
கடலூர் மாவட்ட சமூக நலத்துறையின் கீழ் செயல்பட்டு வரும் ஒருங்கிணைந்த சேவை மையத்தில் சமூகப் பணியாளர் பணியிடத்தை நிரப்புவதற்கான வேலை வாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்த பணியிடம் தற்காலிக அடிப்படையில் நிரப்பப்பட உள்ளது.
சமூகப் பணியாளர்
காலியிடங்களின் எண்ணிக்கை: 1
கல்வித் தகுதி :
சமூகப் பணி, ஆலோசனை, மனநலம், குழந்தைகள் அல்லது பெண்கள் மேம்பாடு அல்லது நிர்வாக மேம்பாட்டில் இளங்கலைப் பட்டம் பெற்றிருக்க வேண்டும். 2 வருட பணி அனுபவம் அவசியம்.
சம்பளம் : ரூ. 18,000
தேர்வு செய்யப்படும் முறை :
இந்தப் பணியிடங்களுக்கு நேர்முகத் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். இந்தப் பணியிடங்களுக்கு பெண்கள் மட்டுமே விண்ணப்பிக்க தகுதியுடையவர்கள் ஆவர்.
விண்ணப்பிக்கும் முறை :
இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்புகிறவர்கள் https://cdn.s3waas.gov.in/s3a96b65a721e561e1e3de768ac819ffbb/uploads/2025/07/17531037225392.pdf என்ற இணையதளப் பக்கத்தில் கொடுப்பட்டுள்ள விண்ணப்பத்தினை பதிவிறக்கம் செய்து பிரிண்ட் எடுத்துக் கொள்ள வேண்டும். பின்னர் விண்ணப்பத்தினை பூர்த்தி செய்து தேவையான ஆவணங்களுடன் கீழ்கண்ட முகவரிக்கு அனுப்ப வேண்டும்.
முகவரி :
மாவட்ட சமூக நல அலுவலகம், அரசு சேவை இல்ல வளாகம், செம்மண்டலம், கடலூர் - 607001
விண்ணப்பிக்க கடைசி தேதி : 08.08.2025