ரெப்கோ வங்கியில் வேலை வாய்ப்பு அறிவிப்பு .
இந்திய அரசின் பொத்துறை வங்கிகளுள் ஒன்றான ரெப்கோ வங்கி மார்க்கெட்டிங் உதவியாளர் பணியிடங்களை நிரப்ப உள்ளது. மொத்தம் 10 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.
Marketing Associate
காலியிடங்களின் எண்ணிக்கை : 10
கல்வித் தகுதி :
அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் ஏதேனும் ஒரு பட்டப்படிப்பு படித்திருக்க வேண்டும். மேலும் ஒரு ஆண்டு பணி அனுபவம் அவசியம்.
வயதுத் தகுதி :
விண்ணப்பதாரர் 30.06.2025 அன்று 25 வயது முதல் 35 வயதிற்குள் இருக்க வேண்டும்.
சம்பளம் : 15,000
தேர்வு செய்யப்படும் முறை :
இந்த பணியிடங்களுக்கு நேர்முகத் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பிக்கும் முறை :
இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்புகிறவர்கள் https://repcobank.com/ என்ற இணையதள பக்கத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தினை பிரிண்ட் எடுத்து கொள்ள வேண்டும். பின்னர் விண்ணப்பத்தினை பூர்த்தி செய்து தேவையான ஆவணங்களுடன் கீழ்கண்ட முகவரிக்கு அனுப்ப வேண்டும்.
முகவரி :
The General Manager (Admin), Repco Bank Ltd, P.B.No.1449, Repco Tower, No:33, North Usman Road, T.Nagar, Chennai – 600 017.
விண்ணப்பிக்க கடைசி தேதி : 05.08.2025