பொதுத்துறை வங்கியில் வேலை வேலை வாய்ப்பு அறிவிப்பு

நாட்டில் உள்ள பொத்துறை வங்கிகளுக்கான ஆட்சேர்ப்பு பணியினை IBPS மேற்கொள்கிறது. இந்த அமைப்பு கனரா வங்கி, இந்தியன் வங்கி, இந்தியன் ஓவர்சீஸ் வங்கி, பேங்க் ஆஃப் பரோடா, பேங்க் ஆஃப் இந்தியா, பேங்க் ஆஃப் மகாராஷ்டிரா, சென்ட்ரல் பேங்க் ஆஃப் இந்தியா, பஞ்சாப் நேஷ்னல் வங்கி, பஞ்சாப் & சிந்து வங்கி, யூகோ வங்கி, யூனியன் பேங்க் ஆஃப் இந்தியா ஆகிய வங்கிகளுக்கான ஆட்சேர்ப்பு நடைமுறைகளை மேற்கொள்கிறது. இதில் தற்போது சிறப்பு அதிகாரிகள் (SPECIALIST OFFICERS) பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

I.T Officer

காலியிடங்களின் எண்ணிக்கை : 203

கல்வித் தகுதி :

அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் Engineering/ Technology Degree in Computer Science/ Computer Applications/ Information Technology/ Electronics/ Electronics & Telecommunications/ Electronics & Communication/ Electronics & Instrumentation படித்திருக்க வேண்டும்.

Agricultural Field Officer

காலியிடங்களின் எண்ணிக்கை: 310

கல்வித் தகுதி :

அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் Degree (graduation) in Agriculture/ Horticulture/Animal Husbandry/ Veterinary Science/ Dairy Science/ Fishery Science/ Pisciculture/ Agri. Marketing & Cooperation/ Co-operation & Banking/ Agro-Forestry/Forestry/ Agricultural Biotechnology/ Food Science/ Agriculture Business Management/ Food Technology/ Dairy Technology/ Agricultural Engineering/ Sericulture படித்திருக்க வேண்டும்.

Rajbhasha Officer

காலியிடங்களின் எண்ணிக்கை : 78

கல்வித் தகுதி :

அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் விண்ணப்பதாரர்கள்  Post Graduate Degree in Hindi படித்திருக்க வேண்டும்.

Law Officer

மொத்த காலியிடங்களின் எண்ணிக்கை : 56

கல்வித் தகுதி :

அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் Bachelor Degree in Law (LLB) படித்திருக்க வேண்டும். மற்றும் பார் கவுன்சிலில் பதிவு செய்திருக்க வேண்டும்.

HR/ Personnal Officer

காலியிடங்களின் எண்ணிக்கை: 10

கல்வித் தகுதி :

அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில்  Post Graduate diploma in Personnel Management / Industrial Relations/ HR / HRD/ Social Work / Labour Law படித்திருக்க வேண்டும்.

Marketing Officer

காலியிடங்களின் எண்ணிக்கை: 350

கல்வித் தகுதி :

அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் விண்ணப்பதாரர்கள்  MMS (Marketing)/ MBA (Marketing)/ PGDBA / PGDBM/ PGPM/ PGDM (Marketing) படித்திருக்க வேண்டும்.

வயதுத் தகுதி : 

விண்ணப்பதாரர் 01.07.2025 அன்று 20 முதல் 30 வயதிற்குள் இருக்க வேண்டும். இருப்பினும், எஸ்.சி, எஸ்.டி (SC/ST) பிரிவினருக்கு 5 ஆண்டுகளும், ஓ.பி.சி (OBC) பிரிவினருக்கு 3 ஆண்டுகளும் மாற்றுத்திறனாளி (PWD) பிரிவினருக்கு 10 ஆண்டுகளும், வயது சலுகை உண்டு.

சம்பளம் : ரூ. 48480-2000/7-62480-2340/2-67160-2680/7-85920

தேர்வு செய்யப்படும் முறை :

இதில் முதல்நிலைத் தேர்வு, முதன்மைத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு என மூன்று படிநிலைகள் உண்டு. முதல்நிலைத் தேர்வு, முதன்மைத் தேர்வுகள் அனைத்தும் கணினி வழி தேர்வுகளாக மட்டுமே நடைபெறும். எழுத்துத் தேர்வு கிடையாது.

முதன்மைத் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் நேர்முகத் தேர்வுக்கு அழைக்கப்படுவர். நேர்முகத் தேர்வு 2024 பிப்ரவரி அல்லது மார்ச் மாதத்தில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. முதன்மைத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வில் பெற்ற மதிப்பெண்களைக் கொண்டு இறுதி தேர்ச்சிப் பட்டியல் வெளியிடப்பட்டு, காலிப்பணியிடங்கள் நிரப்பப்படும்.

விண்ணப்பிக்கும் முறை :

இந்த பணியிடங்களுக்கு ஆன்லைன் மூலம் மட்டுமே விண்ணப்பிக்க முடியும். இதற்கு https://ibps.in/ அல்லது https://ibpsreg.ibps.in/crpspxvjun25/ என்ற இணையதள பக்கத்தில் விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பிக்க கடைசி தேதி : 21.07.2025