இந்திய உளவுத்துறையில் வேலை வாய்ப்பு அறிவிப்பு
இந்திய உளவுத்துறை பணியகத்தில் உதவி புலனாய்வு அலுவலர் பணியிடங்களை நிரப்புவதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
இந்திய அரசின் உள்துறை அமைச்சகத்தின் கீழ் செயல்பட்டு வரும் உளவுத்துறையில் உதவி புலனாய்வு அலுவலர் (ASSISTANT CENTRAL INTELLIGENCE OFFICER GRADE – II/EXECUTIVE) பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. மொத்தம் 995 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.
ASSISTANT CENTRAL INTELLIGENCE OFFICER
காலியிடங்களின் எண்ணிக்கை : 3717
கல்வித் தகுதி :
விண்ணப்பிக்க விரும்புகிறவர்கள் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் இளங்கலை பட்டப்படிப்பு படித்திருக்க வேண்டும்.
வயதுத் தகுதி :
10.08.2025 அன்று 18 வயது முதல் 27 வயது வரை உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். இருப்பினும் எஸ்.சி, எஸ்.டி (SC/ST) பிரிவுகளுக்கு 5 ஆண்டுகளும், ஓ.பி.சி (OBC) பிரிவுக்கு 3 ஆண்டுகளும் வயது வரம்பில் தளர்வு உண்டு.
சம்பளம் : ரூ. 44,900 - 1,42,400
தேர்வு செய்யப்படும் முறை :
இந்தப் பணியிடங்களுக்கு எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் நேர்முகத் தேர்வுக்கு செய்யப்படுவார்கள்.
எழுத்துத் தேர்வு இரண்டு பகுதிகளாக நடைபெறும். முதல் பகுதி 100 மதிப்பெண்களுக்கு நடைபெறும். இதில் ஆங்கிலம் (English language), திறனறிதல் (Reasoning ability) மற்றும் கணிதம் (Numerical ability) பொது அறிவு (General Awareness) பொதுப் பாடம் (General Studies) ஆகிய பிரிவுகளில் இருந்து தலா 20 கேள்விகள் என மொத்தம் 100 கேள்விகள் இடம்பெறும். இதற்கான கால அளவு 1 மணி நேரம் ஆகும்.
இரண்டாம் பகுதி கட்டுரை வரைதல். இது 50 மதிப்பெண்களுக்கு 1 நேர கால அளவில் நடைபெறும்.
விண்ணப்பிக்கும் முறை :
இந்த பணியிடங்களுக்கு ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பப் பதிவு ஜூலை 19 ஆம் தேதி தொடங்குகிறது.
விண்ணப்பிக்க கடைசி தேதி : 10.08.2025
விண்ணப்பக் கட்டணம் :
தேர்வுக் கட்டணம் ரூ.100, விண்ணப்பக் கட்டணம் ரூ. 450. எஸ்.சி/ எஸ்.டி பிரிவினருக்கு தேர்வு கட்டணத்தில் விலக்கு உண்டு.