மயிலாடுதுறை மாவட்ட சுகாதாரத் துறையில் வேலை வாய்ப்பு அறிவிப்பு
மயிலாடுதுறை மாவட்ட சுகாதாரத் துறையில் தேசிய சுகாதார திட்டத்தின் கீழ் செயல்படும் அரசு மருத்துவமனைகளில் பல்வேறு பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. மொத்தம் 14 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இந்த பணியிடங்கள் தற்காலிக நியமனம் அடிப்படையில் நிரப்பப்பட உள்ளன.
Staff Nurse
காலியிடங்களின் எண்ணிக்கை : 4
கல்வித் தகுதி :
விண்ணப்பதாரர்கள் B.Sc (Nursing)/ GNM படித்திருக்க வேண்டும்.
சம்பளம் : ரூ. 18,000
Pharmacist
காலியிடங்களின் எண்ணிக்கை: 1
கல்வித் தகுதி:
விண்ணப்பதாரர்கள் B. Pharm/ D.Pharm படித்திருக்க வேண்டும்.
சம்பளம் : ரூ. 15,000
Lab Technician
காலியிடங்களின் எண்ணிக்கை: 4
கல்வித் தகுதி :
B.Sc. (Medical Lab Technology)/ D.M.L.T. படித்திருக்க வேண்டும்.
சம்பளம் : ரூ. 13,000
Multipurpose Hospital Worker/ Support staff
காலியிடங்களின் எண்ணிக்கை : 2
கல்வித் தகுதி :
விண்ணப்பதாரர்கள் 10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
சம்பளம் : ரூ. 8,500
Optometrist
காலியிடங்களின் எண்ணிக்கை : 1
கல்வித் தகுதி :
விண்ணப்பதாரர்கள் Diploma in Optometry/ Paramedical Ophthalmic Assistance படித்திருக்க வேண்டும்.
சம்பளம் : ரூ. 14,000
Data Entry Operator
காலியிடங்களின் எண்ணிக்கை: 1
கல்வித் தகுதி :
விண்ணப்பிக்க விரும்புகிறவர்கள் B.Sc. Computer Science or Bachelor in Computer Application or any degree with Diploma in Computer Application படித்திருக்க வேண்டும்.
சம்பளம் : ரூ. 12,000
Therapeutic Assistant (Male) – AYUSH
காலியிடங்களின் எண்ணிக்கை: 1
கல்வித் தகுதி :
விண்ணப்பதாரர்கள் Diploma in Nursing Therapy படித்திருக்க வேண்டும்.
சம்பளம் : ரூ. 15,000
தேர்வு செய்யப்படும் முறை :
இந்தப் பணியிடங்களுக்கு நேர்முகத் தேர்வு அடிப்படையில் மட்டுமே தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பிக்கும் முறை :
இந்தப் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்புகிறவர்கள் https://cdn.s3waas.gov.in/s33871bd64012152bfb53fdf04b401193f/uploads/2025/07/17520596236350.pdf என்ற இணையதளப் பக்கத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தினை பிரிண்ட் எடுத்து, பூர்த்தி செய்து தேவையான ஆவணங்களுடன் கீழ்கண்ட முகவரிக்கு அனுப்ப வேண்டும்.
முகவரி :
செயற் செயலாளர், மாவட்ட நலவாழ்வுச் சங்கம், மாவட்ட சுகாதார அலுவலகம், 7வது தளம், மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகம், மன்னம்பந்தல், மயிலாடுதுறை - 609001
விண்ணப்பிக்க கடைசி தேதி : 21.07.2025