கன்னியாகுமரி மாவட்ட சுகாதாரத் துறையில் வேலை வாய்ப்பு அறிவிப்பு

கன்னியாகுமரி மாவட்ட சுகாதாரத் துறையில் தேசிய சுகாதார திட்டத்தில் பல்வேறு பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. மொத்தம் 25 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இந்த பணியிடங்கள் தற்காலிக நியமனம் அடிப்படையில் நிரப்பப்பட உள்ளன. 

ஆலோசகர்

காலியிடங்களின் எண்ணிக்கை : 1

கல்வித் தகுதி :

Bachelors degree in Sociology/ Psychology/ Social Work/ Diploma in GNM/ B.Sc Nursing படித்திருக்க வேண்டும்.

வயதுத் தகுதி :

45 வயது வரை உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

சம்பளம் : ரூ. 18,000

மருந்தாளுநர்

காலியிடங்களின் எண்ணிக்கை : 1

கல்வித் தகுதி :

விண்ணப்பதாரர்கள் Diploma in Pharmacy படித்திருக்க வேண்டும். 

வயதுத் தகுதி :

45 வயது வரை உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

சம்பளம் : ரூ. 15,000

தொழிற்முறை சிகிச்சையாளர்

காலியிடங்களின் எண்ணிக்கை : 1

கல்வித் தகுதி :

Bachelors/ Masters degree in Occupational Therapy படித்திருக்க வேண்டும்.

வயதுத் தகுதி :

40 வயது வரை உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

சம்பளம் : ரூ. 23,000

நகர்ப்புற சுகாதார செவிலியர்

காலியிடங்களின் எண்ணிக்கை : 19

கல்வித் தகுதி :

விண்ணப்பதாரர்கள் 12 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். அல்லது ANM படித்திருக்க வேண்டும்.

வயதுத் தகுதி :

45 வயது வரை உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

சம்பளம் : ரூ. 14,000

காவலர் 

காலியிடங்களின் எண்ணிக்கை: 3

கல்வித் தகுதி :

விண்ணப்பதாரர்கள் தமிழில் எழுதப் படிக்கத் தெரிந்திருக்க வேண்டும்.

வயதுத் தகுதி :

59 வயது வரை உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

சம்பளம் : ரூ. 8,500

தேர்வு செய்யப்படும் முறை : 

இந்தப் பணியிடங்களுக்கு நேர்முகத் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். 

விண்ணப்பிக்கும் முறை : 

இந்தப் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்புகிறவர்கள்  https://cdn.s3waas.gov.in/s38fe0093bb30d6f8c31474bd0764e6ac0/uploads/2025/07/2025070216.pdf என்ற இணையதளப் பக்கத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தினை பிரிண்ட் எடுத்து, பூர்த்தி செய்து தேவையான ஆவணங்களுடன் கீழ்கண்ட முகவரிக்கு அனுப்ப வேண்டும்.

முகவரி :

நிர்வாகச் செயலாளர், மாவட்ட நலவாழ்வுச் சங்கம், மாவட்ட சுகாதார அலுவலர், மாவட்ட சுகாதார அலுவலகம், கிருஷ்ணன்கோவில், நாகர்கோவில்

விண்ணப்பிக்க கடைசி தேதி : 15.07.2025