சென்னை மாநகராட்சியில் வேலை வாய்ப்பு அறிவிப்பு

சென்னை மாநகராட்சியின் (Chennai Corporation) கீழ் செயல்படும் நாய் இன கட்டுப்பாட்டு மையங்களில் உதவியாளர் (Animal Birth Control center Helpers) பணியிடங்களை நிரப்புவதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கான 5 காலி பணி

உதவியாளர்

காலியிடங்களின் எண்ணிக்கை : 5

கல்வித் தகுதி :

ஏதேனும் ஒரு இளங்கலை பட்டப்படிப்பு படித்திருக்க வேண்டும். விலங்கு நல ஆர்வலராக பணிபுரிந்திருக்க வேண்டும்.

வயதுத் தகுதி : விண்ணப்பதாரர்கள் 45 வயதிற்கு உட்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம்.

சம்பளம் : ரூ. 30,000

தேர்வு செய்யப்படும் முறை : 

இந்த பணியிடங்களுக்கு நேர்முகத் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை : 

இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்புவோர்  https://chennaicorporation.gov.in/gcc/pdf/Applications.pdf என்ற இணையதள பக்கத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தினை பதிவிறக்கம் செய்து பிரிண்ட் எடுத்துக் கொள்ள வேண்டும்.
பின்னர், பூர்த்தி செய்த விண்ணப்பத்தினை தேவையான ஆவணங்களுடன் கீழ்கண்ட முகவரிக்கு அனுப்ப வேண்டும்.

முகவரி :

City Health Officer, Public Health Department, 3rd Floor, Amma Maligai Greater Chennai Corporation, Ripon Buildings, Chennai –600003.

விண்ணப்பிக்க கடைசி தேதி : 04.07.2025