நியூ இந்தியா அஷ்சூரன்ஸ் நிறுவனத்தில் 500 காலி பணியிடங்கள் அறிவிப்பு

இந்தியாவின் பொதுத்துறை காப்பீட்டு நிறுவனங்களில் ஒன்றான தி நியூ இந்தியா அஷ்சூரன்ஸ் கம்பெனியில் (NIACL) அப்ரண்டிஸ் பயிற்சியாளர் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. தற்போதைய அறிவிப்பில் நாடு முழுவதும் 500 காலிப் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.

Apprentices

காலியிடங்களின் எண்ணிக்கை : 500

கல்வித் தகுதி :

அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் இளங்கலைப் பட்டம் பெற்றிருக்க வேண்டும். சம்பந்தப்பட்ட மாநிலத்தின் மொழியறிவு அவசியம்.

வயதுத் தகுதி :

விண்ணப்பதாரர் 01.06.2025 அன்று 21 முதல் 30 வயதிற்குள் இருக்க வேண்டும். இருப்பினும், எஸ்.சி/ எஸ்.டி பிரிவினருக்கு 5 ஆண்டுகளும், ஓ.பி.சி பிரிவினருக்கு 3 ஆண்டுகளும் மாற்றுத்திறனாளி பிரிவினருக்கு 10 ஆண்டுகளும், வயது சலுகை உண்டு.

உதவித்தொகை : ரூ. 9000

தேர்வு செய்யப்படும் முறை : 

இந்தப் பணியிடங்களுக்கு கணினி வழித் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை : 

இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பதாரர்கள் ஆன்லைன் மூலம் மட்டுமே விண்ணப்பிக்க முடியும். இதற்கு https://www.newindia.co.in/ என்ற இணையதள பக்கத்தில் விண்ணப்பிக்க வேண்டும். 

விண்ணப்பிக்க கடைசி தேதி : 20.06.2025