UPSC Exam; தேசிய பாதுகாப்பு அகாடமியில் வேலை அறிவிப்பு

மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் (UPSC) தேசிய பாதுகாப்பு அகாடமி மற்றும் கடற்படை அகாடமி (National Defence Academy & Naval Academy) தேர்வுக்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. மொத்தம் 406 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.

தேசிய பாதுகாப்பு அகாடமி

காலியிடங்களின் எண்ணிக்கை : 370

காலியிட விவரம்

  • இராணுவம் (Army) – 208
  • கடற்படை (Navy) – 42
  • விமானப் படை (Air force) – 120

தேசிய கடற்படை அகாடமி

காலியிடங்களின் எண்ணிக்கை : 36

கல்வித் தகுதி :

விண்ணப்பதாரர்கள் 12 ஆம் வகுப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். 

வயதுத் தகுதி :

இந்தப் பணியிடங்களுக்கு 17 முதல் 22 வயதிற்குள் இருக்க வேண்டும். 

தேர்வு முறை : 

இந்த பணியிடங்களுக்கு எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை : 

இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் https://www.upsconline.nic.in/ என்ற இணையதள பக்கத்தில் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க வேண்டும். 

விண்ணப்பக் கட்டணம் :

ரூ 100. இருப்பினும் பெண்கள், எஸ்.சி, எஸ்.டி பிரிவினருக்கு விண்ணப்பக் கட்டணம் இல்லை. 

விண்ணப்பிக்க கடைசி தேதி : 17.06.2025