எல்.ஐ.சி ஹோம் ஃபைனான்ஸில் வேலை வாய்ப்பு அறிவிப்பு

இந்தியாவின் மிகப்பெரிய பொதுத்துறை காப்பீட்டு நிறுவனமான லைஃப் இன்ஸ்சூரன்ஸ் கார்ப்ரேசன் ஆஃப் இந்தியா (LIC) நிறுவனத்தின் துணை நிறுவனமான ஹோம் ஃபைனான்சில் அப்ரண்டிஸ் பயிற்சியாளருக்கான  (Apprenticeship) காலி பணி இடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. தற்போதைய அறிவிப்பில் நாடு முழுவதும் 250 காலிப் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. தமிழகத்தில் 36 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.

Apprenticeship 

காலியிடங்களின் எண்ணிக்கை : 250

கல்வித் தகுதி : அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் பட்டப்படிப்பை முடித்திருக்க வேண்டும்.

வயதுத் தகுதி :

விண்ணப்பதாரர் 01.06.2025 அன்று 21 முதல் 25 வயதிற்குள் இருக்க வேண்டும். 

உதவித்தொகை : ரூ. 12,000

தேர்வு செய்யப்படும் முறை : 

இந்தப் பணியிடங்களுக்கு கணினி வழித் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை : 

இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்புகிறவர்கள் ஆன்லைன் மூலம் மட்டுமே விண்ணப்பிக்க முடியும். இதற்கு https://www.lichousing.com/ என்ற இணையதள பக்கத்தில் விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பிக்க கடைசி தேதி : 28.06.2025

விண்ணப்பக் கட்டணம் : பொதுப்பிரிவு மற்றும் ஓ.பி.சி பிரிவினருக்கு ரூ. 944, எஸ்.சி, எஸ்.டி, பெண்கள் பிரிவினருக்கு ரூ. 708, மாற்றுத்திறனாளி பிரிவினருக்கு ரூ. 472