அருவங்காடு வெடிமருந்து தொழிற்சாலை வேலை வாய்ப்பு அறிவிப்பு

தமிழகத்தில், நீலகிரி மாவட்டம் அருவங்காட்டில் உள்ள வெடிமருந்து தொழிற்சாலையில் (Cordite Factory) 10 ஆம் வகுப்பு மற்றும் ஐ.டி.ஐ படித்தவர்களுக்கான பயிற்சி காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. மொத்தம் 45 காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.

Non ITI Attendant Operator Chemical Plant

காலியிடங்களின் எண்ணிக்கை : 18

கல்வித் தகுதி : 10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

ஊக்கத்தொகை : ரூ. 6000

Ex ITI Attendant Operator Chemical Plant

காலியிடங்களின் எண்ணிக்கை : 20

கல்வித் தகுதி :

விண்ணப்பிக்க விரும்புவோர் ஐ.டி.ஐ படித்திருக்க வேண்டும். 10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

ஊக்கத்தொகை : ரூ. 7000

Ex ITI Laboratory Assistant Chemical Plant

காலியிடங்களின் எண்ணிக்கை : 7

கல்வித் தகுதி :

ஐ.டி.ஐ படித்திருக்க வேண்டும். 10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

ஊக்கத்தொகை : ரூ. 7000

தேர்வு செய்யப்படும் முறை : 

இந்தப் பணியிடங்களுக்கு 10 ஆம் வகுப்பு அல்லது ஐ.டி.ஐ படிப்பில் பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை : 

இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்புவோர்  https://cordite.co.in/ என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தினை பிரிண்ட் எடுத்துக் கொள்ள வேண்டும். பின்னர் விண்ணப்பத்தினை பூர்த்தி செய்து தேவையான ஆவணங்களுடன் கீழ்கண்ட முகவரிக்கு அனுப்ப வேண்டும்.

முகவரி :

The General Manager, Cordite Factory, Aruvankadu, The Nilgiris District. Tamilnadu Pin - 643 202.  

விண்ணப்பிக்க கடைசி தேதி : 21.06.2025