அண்ணா பல்கலைக்கழகத்தில் உதவியாளர் பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு

தமிழ்நாடு தொழில்நுட்பக் கல்வி இயக்குநரகத்தின் கீழ் சென்னை அண்ணா பல்கலைக்கழக எம்.ஐ.டி பொறியியல் கல்லூரியில் செயல்படும் “பாரம்பரிய சித்த யாக்கை இலக்கணம் (உடல் கலவை) முறையை அடிப்படையாகக் கொண்ட ஏ.ஐ- ஒருங்கிணைந்த தடுப்பு சுகாதார நிபுணர் வழிகாட்டுதல் அமைப்பில்” திட்ட உதவியாளர் பணியிடத்தை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்தப் பணியிடம் தற்காலிக அடிப்படையில் நிரப்பப்பட உள்ளன. 

Project Assistant

காலியிடங்களின் எண்ணிக்கை : 1

கல்வித் தகுதி :

B.E./ B.Tech. in ECE/ E&I/ I&C/ EEE/ CSE/ IT/ Biomedical/ AI&DS/ படித்திருக்க வேண்டும். 

சம்பளம் : ரூ. 25,000

தேர்வு செய்யப்படும் முறை: இந்தப் பணியிடங்களுக்கு நேர்முகத் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். 

விண்ணப்பிக்கும் முறை : 

இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் https://www.annauniv.edu/pdf/Project_Assistant_Appl_Form_IE_second_call.pdf என்ற இணையதளப் பக்கத்தில் அறிவிப்புக்கு கீழே கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தினை பதிவிறக்கம் செய்து பிரிண்ட் எடுத்துக் கொள்ள வேண்டும். பின்னர் விண்ணப்பத்தினை பூர்த்தி செய்து தேவையான ஆவணங்களுடன் கீழ்கண்ட முகவரிக்கு அனுப்ப வேண்டும்.

முகவரி :

Dr.N.Pappa, Professor, Department of Instrumentation Engineering, MIT Campus, Anna University, Chromepet, Chennai – 600044

விண்ணப்பிக்க கடைசி தேதி : 09.06.2025