சுட்டெரிக்கும் கோடை வெயிலில் வெப்பத்தின் தாக்கத்தை தணிக்க கும்பக்கரை அருவியில் குவியும் சுற்றுலா பயணிகள்
தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் அமைந்துள்ள கும்பக்கரை அருவியின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கடந்த 4 மாதங்களாக முற்றிலும் மழைப்பொழிவு இல்லாத நிலையில் அருவிக்கு முற்றிலும் நீர்வரத்து குறைந்து காணப்படுகிறது.
தேனி மாவட்டத்தில் ஒரு சில பகுதிகளில் பெய்த மழை காரணமாக அருவியில் லேசான நீர்வரத்து ஏற்பட்டது. தற்போது கோடை விடுமுறை என்பதால் விடுமுறையை களிக்க பொதுமக்கள் அதிகளவில் சுற்றுலா இடங்களுக்கு சென்று வருகின்றனர்.

இந்த நிலையில் சுட்டெரிக்கும் கோடை வெயிலின் வெப்பத்தின் தாக்கத்தை தணிப்பதற்காக தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து வருகை தரும் சுற்றுலா பயணிகள் கும்பக்கரை அருவிக்கு செல்வதை விருப்பமாக வைத்துள்ளனர். முற்றிலும் குறைந்த அளவு வரும் நீரில் பல மணி நேரம் காத்திருந்து குளிக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ள போதும், வெப்பத்தின் தாக்கத்தை தணிக்க சுற்றுலாப் பயணிகள் காத்திருந்து மகிழ்ச்சியுடன் குளித்து செல்கின்றனர்.