இந்திய ரயில்வே வேலை வாய்ப்பு அறிவிப்பு

இந்திய ரயில்வேயில் ரயில் ஓட்டுனர் எனப்படும் அசிஸ்டெண்ட் லோகோ பைலட் (Assistant Loco Pilot (ALP)) பணியிடங்களை நிரப்புவதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மொத்தம் 9970 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இந்த பணியிடங்கள் நேரடி நியமனம் அடிப்படையில் நிரப்பப்பட உள்ளன. 

Assistant Loco Pilot (ALP)

காலியிடங்களின் எண்ணிக்கை : 9970

கல்வித் தகுதி :

பத்தாம் வகுப்பு தேர்ச்சி மற்றும் ஐ.டி.ஐ படித்திருக்க வேண்டும் அல்லது Diploma in Engineering or Bachelor’s Degree in Engineering படித்திருக்க வேண்டும். 

வயதுத் தகுதி :

01.07.2025 அன்று 18 வயது முதல் 30 வயதிற்குள் இருக்க வேண்டும். இருப்பினும் ஓ.பி.சி பிரிவினருக்கு 3 ஆண்டுகளும், எஸ்.சி மற்றும் எஸ்.டி பிரிவினருக்கு 5 ஆண்டுகளும் வயது வரம்பில் தளர்வு உண்டு.

சம்பளம் : ரூ. 19,900

தேர்வு செய்யப்படும் முறை : 

இந்தப் பணியிடங்களுக்கு முதல்நிலைத் தேர்வு, முதன்மைத் தேர்வு, கணினி வழி ஆப்டிடியூட் டெஸ்ட் ஆகியவற்றின் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை: 

இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் https://www.rrbchennai.gov.in/ என்ற இணையதள பக்கம் மூலமாக ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். 

விண்ணப்பிக்க கடைசி தேதி : 19.05.2025

முன்னதாக இந்தப் பணியிடங்களுக்கு மே 11 ஆம் தேதி விண்ணப்பிக்க கடைசி தேதியாக இருந்தது. தற்போது கால அவகாசம் நீட்டிக்கப்பட்டு மே 19 ஆம் தேதி கடைசி தேதியாக அறிவிக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பக் கட்டணம் :

ரூ. 500. இருப்பினும் எஸ்.சி, எஸ்.டி பிரிவினர் மற்றும் பெண்களுக்கு ரூ. 250