திருச்சி என்.ஐ.டியில் ஆராய்ச்சி உதவியாளர் பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு
மத்திய அரசின் உயர்கல்வி நிறுவனங்களில் ஒன்றான தேசிய தொழில்நுட்ப கழகமான, திருச்சி என்.ஐ.டி.,யில் (NIT) காவிரி நதிப் படுகைக்கான நிலை மதிப்பீடு மற்றும் மேலாண்மைத் திட்டத்திற்கான மையத்தில் இளநிலை ஆராய்ச்சி உதவியாளர் பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளிவந்துள்ளது. மொத்தம் 6 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இந்த பணியிடங்கள் தற்காலிக நியமனம் அடிப்படையில் நிரப்பப்பட உள்ளன.
Junior Research Fellow (JRF)
காலியிடங்களின் எண்ணிக்கை : 6
கல்வித் தகுதி :
B. E./B. Tech. in Civil Engineering and M. E./M. Tech. or Equivalent in Water Resources Engineering/ Hydraulic Engineering / Hydroinformatics/ Agriculture Engineering/ Remote Sensing/ Geoinformatics பட்டப்படிப்பு படித்திருக்க வேண்டும்.
சம்பளம் :
முதல் இரண்டு வருடங்களுக்கு ரூ. 37,000 + 16% HRA
மூன்றாம் வருடம் ரூ. 42,000 + 16% HRA
தேர்வு செய்யப்படும் முறை :
இந்த பணியிடங்களுக்கு நேர்முகத் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவர்.
விண்ணப்பிக்கும் முறை :
இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் https://www.nitt.edu/home/other/jobs/CIV_cCauvery_JRF_2025.pdf என்ற இணையதளப் பக்கத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தினை பதிவிறக்கம் செய்து பிரிண்ட் எடுத்துக் கொள்ள வேண்டும். பின்னர் விண்ணப்பத்தினைப் பூர்த்தி செய்து தேவையான ஆவணங்களுடன் கீழ்கண்ட முகவரிக்கு அனுப்ப வேண்டும்.
முகவரி :
Dr. Nisha Radhakrishnan, Associate Professor, Department of Civil Engineering, National Institute of Technology, Tiruchirappalli – 620 015
விண்ணப்பிக்க கடைசி தேதி : 12.05.2025